
புதுச்சேரியில் சபாநாயகர் இருக்கையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நியமன எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமானம் செய்து வைத்தது ஏன் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் 30 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இதில் 3 எம்.எல்.ஏக்களை அரசே நியமித்து கொள்ள அதிகாரம் உள்ளது. இதைதொடர்ந்ந்து, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆளும் நிலையில், பா.ஜ.க உறுப்பினர்களைநியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், இந்து அமைப்புகளின் தீவிர ஆதரவாளர் செல்வ கணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த பதவிக்கு கவர்னர் கிரண்பேடி 3 பேரை தேர்வு செய்து அந்த பட்டியலை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தார்.
இது காங்கிரஸ் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் சபாநாயகர் இருக்கும் நிலையில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடியே அவர்கள் மூன்று பேருக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து பின்னர் ஒப்புதல் வழங்கப்படுவதுதான் வழக்கம் எனவும், தற்போது பாரதிய ஜனதா அரசு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமயிலேயே நியமன எம்.எல்.ஏக்களை நியமித்துள்ளது கண்டிக்கதக்கது எனவும் தெரிவித்தார்.
கிரண்பேடி யாருக்கும் தெரியாமல் மூன்று பேருக்கும் பதவி பிரமானம் செய்து வைத்துள்ளதாகவும், சபாநாயகர் இருக்கையில் கிரண்பேடி ஏன் பதவி பிரமானம் செய்து வைத்தார் எனவும் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, அதனை திசை திருப்பும் முயற்சியாக நியமனம் நடைபெற்றுள்ளதாகவும், நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்க முதலமைச்சரும், அமைச்சரவையும் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
துணை நிலை ஆளுநர் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க எவ்வித அதிகாரமும் இல்லை எனவும், முதலமைச்சரின் ஆலோசனையை ஏற்று செயல்படத்தான் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு எனவும் தெரிவித்தார்.