"சபரிமலை கோயில் உண்டியலில் பாகிஸ்தான் ரூபாய் நோட்டு" - போலீசார் தீவிர விசாரணை

 
Published : Jul 06, 2017, 05:23 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
"சபரிமலை கோயில் உண்டியலில் பாகிஸ்தான் ரூபாய் நோட்டு" - போலீசார் தீவிர விசாரணை

சுருக்கம்

pakistan currency in sabarimala bill

கேரள மாநிலம், சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயில் உண்டியலில் பாகிஸ்தான் நாட்டு கரன்சி இருந்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

கேரள மாநிலம், பத்திணம்திட்டா மாவட்டம், சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. அங்கு கடந்த மாத் 28-ந்தேதி புதிய தங்கக்கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பின், கடந்த சில நாட்களுக்கு முன், கோயில் உண்டியல் திறந்து பக்தர்கள் அளித்த காணிக்கை  எண்ணப்பட்டது. அப்போது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரூ.20 நோட்டு இருந்தது கண்டு கோயில் அதிகாரிகளிடம் ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பாகிஸ்தான் ரூ.20 நோட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பத்திணம்திட்டா போலீஸ் எஸ்.பி. சதீஸ் பினோ கூறுகையில், “ சபரிமலை ஐயப்பன் கோயில் உண்டியலில் முதல்முறையாக பாகிஸ்தான் கரன்சி நோட்டு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளோம், மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கும் தகவல் அளித்துள்ளோம்.

மேலும், நாங்கள் நடத்தும் விசாரணை அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்புக்கும் அனுப்ப இருக்கிறோம். சபரிமலையில் உள்ள கண்காணிப்புகேமிராக்களை ஆய்வு செய்து யார் இந்த ரூபாய் நோட்டை டெபாசிட் செய்தார்கள் என்று கண்டுபிடிப்போம்’’ என்றார்.

இதையடுத்து, சபரிமலையில் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் வரலாம் என்பதால், போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். 24 நேரமும் கண்காணிப்பு பணியில் போலீசாரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"