எச்சரிக்கை… விமானக் கடத்தலில் ஈடுபட்டால் மரண தண்டனை!!

 
Published : Jul 06, 2017, 04:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
எச்சரிக்கை… விமானக் கடத்தலில் ஈடுபட்டால் மரண தண்டனை!!

சுருக்கம்

death sentence for plane hijacking

விமானக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி விமானக் கடத்தலில் ஈடுபட்டு விமானத்துக்குள்ளாகவோ அல்லது தரையிலோ ஒருவருக்கு மரணம் நேரிட்டால் அது விமானக் கடத்தலாகக் கருதப்பட்டு அந்த ஈடுபட்ட நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

கடந்த 2016ம் ஆண்டில் நாடாளுமன்றம் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த விட்டது. ஆனால், அரசு இந்த சட்டத்துக்கான விதிமுறைகளை உருவாக்காததால், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

கடந்த 1982-ம் ஆண்டு விண்டேஜ் சட்டம் மிகவும் பழமையான விதிமுறைகளும், வலுவில்லாத விதிமுறைகளும் கொண்டு இருப்பதையொட்டி, புதியதாக விமானக் கடத்தல் தடுப்புச் சட்டத்தை மத்தியஅரசு கொண்டு வந்தது.

இந்த புதியச் சட்டத்தின்படி, விமானக்கடத்தல்  என்பது, விமானத்துக்குள்ளாகவோ அல்லது தரையிலோ ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அது விமானக் கடத்தலில் வரும்.

மேலும், விமானத்துக்குள் நடத்தப்படும் தாக்குதல், விமானம் புறப்படத் தயாராகும் 24மணி நேரத்தில் இருந்து, தரையிறங்கிய 24 மணி நேரம் வரை ஏதேனும் தாக்குதல் சம்பவங்கள் நடந்தால் அது விமானக் கடத்தலில் வரும். மேலும், பயோ-ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் தாக்கம் அடுத்த சில நாட்களில்உணரப்பட்டாலும் அது விமானக் கடத்ததில் வரும். 

இதன்படி இனி விமானக் கடத்தில் ஈடுபடும் எந்த நபருக்கும் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் 19 விமானக் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன.இந்த புதிய 2016 விமானக்கடத்தல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், விமானத்தை கடத்துவதாக மிரட்டுவது, முயற்சிப்பது, குற்றச்செயலில் ஈடுபடுவதும் விமானக் கடத்தல் ஆகும்.  மேலும் மற்றவர்களை இந்த செயலில் ஈடுபடச் செய்தல், ஊக்குவித்தல் ஆகியவையும் விமானக்கடத்தலாக கருதப்படும். 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!