தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் அச்சல் குமார் ஜோதி...

Asianet News Tamil  
Published : Jul 06, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் அச்சல் குமார் ஜோதி...

சுருக்கம்

achal kumar jyoti appointed as election commissioner

இந்தியாவின் 21-வது தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று பதவியேற்றார்.

தற்போதைய தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, நஜீம் ஜைதியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், வரும் நாளை முதல் தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அச்சல் குமார் ஜோதி இன்று பதவியேற்றார். 64 வயதான அச்சல் குமார் ஜோதி, 1975 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர். குஜராத்தில் தலைமை செயலாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் 3 ஆணையர்களில் ஒருவராக பதவி வகித்து வந்தார்.

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியின் பதவி காலம் முடிவடைவதை அடுத்து, அச்சல் குமார் ஜோதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, அச்சல் குமார் ஜோதி இன்று தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார். அச்சல் குமார் ஜோதி, அடுத்த ஆண்டு ஜனவரி வரை பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் காதி ஆடைகள் அணிந்து வருவது கட்டாயம்... அரசு அதிரடி உத்தரவு..!
மகாராஷ்டிராவின் துணை முதல்வராகும் பெண்மணி.. யார் இந்த சுனேத்ரா பவார்..?