
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக வரும் 11 ஆம் தேதி எதிர்கட்சித் தலைவர்கள கூடி விவாதிக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் அடுத்து யாரை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தகுதியுள்ள ஒரு நபரை தேர்வு செய்யும் பணியில் பாஜக இறங்கியுள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்கச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், சபாநாயகர் போன்ற பதவிகளை வகித்து வருவதால், அடுத்து குடியரசுத் துணைத் தலைவர் பதவியை தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கலாம் என பாஜக முடிவு செய்குள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,
தற்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களோடு சேர்த்து மொத்தம் 550 பேரின் ஆதரவு பாஜகவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியதும், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளருக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வரும் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்தும், வேட்பாளர் யார் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.