"திலீப் காவ்யா மாதவன் தப்ப முடியாது" - பினராயி விஜயன் எச்சரிக்கை!

 
Published : Jul 06, 2017, 10:52 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
"திலீப் காவ்யா மாதவன் தப்ப முடியாது" - பினராயி விஜயன் எச்சரிக்கை!

சுருக்கம்

pinarayi vijayan warning dileep kavya

நடிகை பாவானா காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும்  மலையாள நடிகர் தீலீப் மற்றும் அவரது மனைவி நடிகை காவ்யா மாதவன் ஆகியோர் தப்பமுடியாது என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகை பாவனா காரில், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் திரையுலகை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பாவனாவின் வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவருடைய முன்னாள் கார் ஓட்டுநர், பல்சர் சுனில்  ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம்  கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட பல்சர் சுனில், பின் வெளியே வந்த அவரிடம் பலர் பேட்டி எடுக்க முயன்ற போது  போலீசார் அனைவரையும் தடுத்ததால் அவரிடம் பேட்டி எடுக்க முடியாமல் போனது. 

கைது செய்யப்பட்டுள்ள பல்சர் சுனில் என்பவர் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில் நடிகை பாவனா கடத்தப்பட்டதற்கு நடிகர் திலீப் பணம் கொடுத்து உதவியதாக தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் நடிகர் திலீப்பிடம் போலீசார், ஏற்கனவே பல மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் திலீப்பின் இரண்டாவது மனைவி காவியா மாதவனின் வணிக நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.  அங்கு கைப்பற்றப்பட்ட மெமரி கார்டில் நடிகை  பாவனாவை  பாலியல் ரீதியாக துன்புறுத்தியபோது ஆபாசமாக எடுக்கப்பட்ட படம்  இருந்ததாக போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

இத்னிடையே  நடிகர் திலீப்பும், காவியா மாதவனும் திடீரென தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் இருவரும் தமிழகத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தீலீப் மற்றும் அவரது மனைவி நடிகை காவ்யா மாதவன் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து தப்பமுடியாது என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும்  பினராயி உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ரூ.30 கோடி மதிப்புள்ள தங்கம்-வைரம் ஜொலிக்கும் ராமர் சிலை… அடையாளம் தெரியாத பக்தர் செய்த தானம்!
பூமியின் எந்த மூலையிலும் இணையம்.. LVM3 ராக்கெட்டில் இமாலய சாதனை படைத்த இஸ்ரோ