"போலி சான்றிதழ் கொடுத்தால் உடனடி டிஸ்மிஸ்" - உச்சநீதிமன்றம் அதிரடி!

First Published Jul 6, 2017, 11:26 AM IST
Highlights
SC orders about fake ceritificates


போலி சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்தவரின்  பணியைப் உடனடியாக பறிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது

போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மீதும், இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரிகளில் இடம்பிடித்தவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்திருந்தது.

இதனை எதிர்த்து சிலர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட சில உத்தரவை பிறப்பித்திருந்தது.இதனை எதிர்த்து  மகாராஷ்ட்ரா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.


இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிபகள் ,  போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்திருந்தாலோ அல்லது இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றிருந்தாலோ  அது சட்டப்படி குற்றம் என்றும், உடனடியாக அவர்களது  பணி அல்லது பட்டத்தை பறிக்கலாம் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

அரசு ஊழியராக இருந்தால் அவர்கள் எத்தனை காலம் பணியில் இருந்தாலும் அது பற்றி கருத்தில் கொள்ளாமல் உடனடியாக பணியில் இருந்து நீக்கி, அவர்களுக்கு உரிய தண்டனையும் கொடுக்கப்பட வேண்டும் என்றும்  உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த பிரச்சனையில்  எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்றும்  நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்,
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு, அனைத்து மாநிலங்களுக்கு பொருந்தும்.

click me!