Nagaland : தொழிலார்களை தவறுதலாக சுட்டுக்கொன்ற சம்பவம்.. குற்றப்பத்திரிகையில் சிக்கிய 30 ராணுவ வீரர்கள் !

Published : Jun 11, 2022, 11:58 PM ISTUpdated : Jun 11, 2022, 11:59 PM IST
Nagaland : தொழிலார்களை தவறுதலாக சுட்டுக்கொன்ற சம்பவம்.. குற்றப்பத்திரிகையில் சிக்கிய 30 ராணுவ வீரர்கள் !

சுருக்கம்

Nagaland : நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நாகலாந்து மாநில காவல்துறை குற்றப்பத்திரிகையில் 30 ராணுவ வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த முதல்வர் நெய்பியு ரியோ தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மோன் மாவட்டம், ஓடிங் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் அன்று பணி முடிந்து, தொழிலாளர்கள் ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையினர், தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என்று தவறுதலாக நினைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள், ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில், ஒரு ராணுவ வீரர் உயிர்இழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் உண்டாக்கியது. 

இந்நிலையில், ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், 30 ராணுவ வீரர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, மத்திய அரசுக்கு நாகாலாந்து அரசு கடிதம் எழுதியுள்ளது. இதனை அம்மாநில காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13 தேதி திறக்கப்படுமா ? அதிகரிக்கும் கொரோனா.. தேதி மாறுமா ?

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!