வாட்ஸ்அப்பில் ஷேர் ஆன ஆபாச படம்... சுங்கத் துறை அதிகாரி சஸ்பெண்ட்..!

By Kevin KaarkiFirst Published Jun 11, 2022, 5:11 PM IST
Highlights

சுங்கத் துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் அடங்கிய அலுவல் ரீதியிலான வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படத்தை பகிர்ந்து இருக்கிறார். 

மத்திய பிரதேச மாநிலத்தின் காண்ட்வா பகுதியை சேர்ந்த சுங்கத் துறை அதிகாரி அலுவல் ரீதியிலான வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படங்களை பகிர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சுங்கத் துறையை சேர்ந்த மாவட்ட துணை அதிகாரி ஆர்.பி. அரிவார் தன்னுடன் பணியாற்றும் இதர அரசு அலுவலர்கள் அடங்கிய அலுவல் ரீதியிலான வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படத்தை பகிர்ந்து இருக்கிறார். இது குறித்து ஆர்.பி. அரிவாருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதை அடுத்து துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஆர்.பி. அரிவார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். 

மாவட்ட சுங்கத் துறை அதிகாரி விகாஸ் மண்டோலி, “மாவட்ட துணை சுங்கத் துறை அதிகாரி ஆர்.பி. அரிவார் சுங்கத் துறையின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குரூப்பில் கடந்த மே மாதம் 23 ஆம் தேதி மாலை 6.15 மணி அளவில் ஆபாச பட வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோவை பார்த்து பெண் அலுவலர்கள் அதிர்ச்சி மற்றும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் கலெக்டரிடம் இது குறித்து புகார் அளித்தனர். இது குறித்த விசாரணையை அடுத்து அதிகாரியின் கீழ்தரமான செயல் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார், ” என்று தெரிவித்தார். 

மறுப்பு:

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஆர்.பி. அரிவார், “அலுவலகத்தில் இருக்கும் போது, கழிவறைக்கு சென்று இருந்த சமயத்தில் யாரோ என் மொபைல் போனை எடுத்து வீடியோவை பகி்ரந்து இருக்கின்றனர்,” என தெரிவித்து இருக்கிறார். 

சுங்கத் துறையில் பணியாற்றி வந்த அலுவலர் அலுவல் ரீதியிலான வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச பட வீடியோவை பகிர்ந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

click me!