நுபுர் ஷர்மா குறித்து சர்ச்சை வீடியோ... யூடியூபரை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

By Kevin KaarkiFirst Published Jun 11, 2022, 4:30 PM IST
Highlights

சர்ச்சை கருத்துக்கள் உலகளவில் முஸ்லீம் மத மக்களை கோபம் அடைய செய்தது. இவரின் கருத்துக்களுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இடைநீக்கம் செய்யப்பட்ட பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் தலையை துண்டிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்ட காஷ்மீரை சேர்ந்த யூடியூபர் ஃபைசல் வானியை ஜ்ம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். 

முன்னதாக இடை நீக்கம் செய்யப்பட்ட பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கள் உலகளவில் முஸ்லீம் மத மக்களை கோபம் அடைய செய்தது. இவரின் கருத்துக்களுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், தான் யூடியூபர் ஃபைசல் வானி நுபுர் ஷர்மாவின் தலையை துண்டிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை உருவாக்கி அதனை தனது சேனலில் வெளியிட்டார். 

வைரல் வீடியோ:

வீடியோ வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆனதை அடுத்து, யூடியூபர் ஃபைசல் வானி அதனை உடனடியாக நீக்கினார். மேலும் தான் வெளியிட்ட வீடியோ யாரையேனும் காயப்படுத்தி இருந்தால், மன்னித்து விடும் படி அவர் மன்னிப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இவர் டீப் பெயின் எனும் பெயரில் யூடியூபில் ஃபிட்னஸ் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். நுபுர் ஷர்மா குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்டதை இன்று (ஜூன் 11) காலை ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

“அது மிக விரைவில் வைரல் ஆகி விட்டது. ஆம், நான் தான் அந்த வீடியோவை உருவாக்கி, வெளியிட்டேன். ஆனால் எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் கிடையாது. நான் அந்த வீடியோவை அழித்து விட்டேன். அந்த வீடியோ யாரையாவது காயப்படுத்தி இருந்தால், அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,” என யூடியூபர் ஃபைசல் வானி தனது வீடியோவில் தெரிவித்து இருந்தார். 

click me!