Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

By Raghupati R  |  First Published Jun 11, 2022, 10:14 PM IST

Sonu Sood : கொரோனா காலகட்டத்தில் செய்த உதவிகள், இந்தியா முழுவதும் அவர் புகழைப் பரப்பியது என்றே சொல்லலாம். அவரது லாப நோக்கமற்ற தொண்டு அறக்கட்டளை ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை சேகரித்தது. 


கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து பெரும் பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகர் சோனு சூட்.கொரோனா முதல் அலையின் போது கடந்த ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட அவரது லாப நோக்கமற்ற தொண்டு அறக்கட்டளை ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை சேகரித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை, அதில் ரூ.1.9 கோடி நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

கொரோனா காலகட்டத்தில் செய்த உதவிகள், இந்தியா முழுவதும் அவர் புகழைப் பரப்பியது என்றே சொல்லலாம். இந்நிலையில், நான்கு கை, நான்கு கால் கொண்ட சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு சோனு சூட் உதவி இருக்கிறார். பிஹார் கிராமத்தை சேர்ந்த சாமுகி குமாரி என்ற சிறுமி, பிறவியிலேயே நான்கு கால், நான்கு கைகளுடன் இருந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், அந்தச் சிறுமியை சூரத்தில் உள்ள மருத்துவமனையில் சோனு சூட் சேர்த்தார். கடந்த புதன்கிழமை சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. 7 மணி நேரம் நடந்த சிகிச்சையில் அதிகப்படியாக இருந்த கை, கால் நீக்கப்பட்டன.

சிறுமி நலமாக இருக்கிறார் என்றும் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்ப இருக்கிறார் என்றும் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். இத்துடன் சாமுகி குமாரியின் கல்விக்கும் உதவுவதாக சோனு சூட் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் அவரைப் பாராட்டி உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல நெட்டிசன்கள் உட்பட பலரும் சோனி சூட்டுக்கு நன்றியை தெரிவித்தும், வாழ்த்தியும் வருகின்றனர்.

இதையும் படிங்க : தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13 தேதி திறக்கப்படுமா ? அதிகரிக்கும் கொரோனா.. தேதி மாறுமா ?

இதையும் படிங்க : Seeman : திமுக ஊழல் ஓகே.. அதிமுக ஊழலை எப்போ பேசுவீங்க அண்ணாமலை ? சீமான் அதிரடி பேட்டி!

click me!