Bill Gates: கோவின் திட்டம் உலகத்துக்கே முன்மாதிரியானது - பிரதமர் மோடியைச் சந்தித்த பில் கேட்ஸ் பாராட்டு

Published : Mar 04, 2023, 10:55 AM ISTUpdated : Mar 04, 2023, 10:59 AM IST
Bill Gates: கோவின் திட்டம் உலகத்துக்கே முன்மாதிரியானது - பிரதமர் மோடியைச் சந்தித்த பில் கேட்ஸ் பாராட்டு

சுருக்கம்

இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கோவின் இணையதளம், ஆதார் அடையாள அட்டை, கதி சக்தி முதலிய திட்டங்கள் பற்றி பாராட்டி இருக்கிறார்.

பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவரான கேட்ஸ், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவில் முதல் முறையாக சுற்றுப்பயணம் செய்துவருகிறார். வெள்ளிக்கிழமை அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதுபற்றி அவர் தனது கேட்ஸ் நோட்ஸ் என்ற இணையதளத்தில் எழுதியுள்ளார்.

"எனது பயணத்தின் முக்கிய அம்சம் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்தது. இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள சமத்துவமின்மையைக் குறைக்க அறிவியலும் புத்தாக்க முயற்சிகளும் எவ்வாறு உதவும் என்பதைப் பற்றிப் பேசினோம்.

கேரளாவில் பரபரப்பு... ஏசியாநெட் நியூஸ் அலுவலகம் மீது தாக்குதல் - இந்திய பிரஸ் கிளப் கண்டனம்

கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நான் அதிகம் பயணம் செய்யவில்லை என்றாலும், பிரதமர் மோடியும் நானும் தொடர்பில் இருந்தோம். குறிப்பாக கோவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்குவது மற்றும் இந்தியாவின் சுகாதார அமைப்புகளில் முதலீடு செய்வது பற்றிப் பேசினோம். கேட்ஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்படும் பல பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மலிவு விலை கொண்ட தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா அற்புதமான திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தொற்றுப் பரவலின்போது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல நோய்களைத் தடுக்கின்றன.

புதிய உயிர்காக்கும் கருவிகளை தயாரிப்பதோடு, அவற்றை பிற நாடுகளுக்கும் வழங்குவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அதன் பொது சுகாதார அமைப்பு 2.2 பில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. Co-WIN எனப்படும் இணையதளம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதைத் திட்டமிட மக்களுக்கு உதவி இருக்கிறது. அதன் மூலம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தை ஆதரிக்க இந்த தளம் இப்போது விரிவுபடுத்தப்படுகிறது. Co-WIN உலகத்திற்கே முன்மாதிரி என்று பிரதமர் மோடி நம்புகிறார். நானும் அதை ஒப்புக்கொள்கிறேன்.

தானாக ஸ்டார்ட் ஆகி கடைக்குள் நுழைந்த டிராக்டர்... இணையத்தில் வைரலான வீடியோ!!

தொற்றுநோய்களின் போது 200 மில்லியன் பெண்கள் உட்பட 300 மில்லியன் மக்களுக்கு அவசர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியை இந்தியா வழங்கியுள்ளது. ஆதார் என அழைக்கப்படும் மூலம் டிஜிட்டல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு இந்தியா முன்னுரிமை அளித்துள்ளதால் மட்டுமே இது சாத்தியமானது

பிரதமருடனான எனது உரையாடல், சுகாதாரம், மேம்பாடு மற்றும் காலநிலை ஆகியவற்றில் இந்தியா செய்துவரும் முன்னேற்றம் குறித்து முன் எப்போதையும் விட அதிக நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. நாம் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தால் என்னென்ன சாத்தியம் என்பதை இந்தியா காட்டுகிறது. இந்தியா இந்த முன்னேற்றத்தைத் தொடரும் என்றும் பல புதுமைகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்ளும் என்றும் நம்புகிறேன். அதில் கேட்ஸ் அறக்கட்டளையும் பங்களிக்க உள்ளது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்" இவ்வாறு பில்கேட்ஸ் தன் இந்தியப் பயணம் பற்றிக் கூறியுள்ளார்.

M K Stalin Camel: முதல்வருக்கு பரிசளித்த ஒட்டகத்தின் கதி இதுதானா! விலங்கின ஆர்வலர்கள் கவலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!
திருப்பதியில் ரூ.54 கோடி சால்வை மோசடி! பட்டுக்கு பதில் பாலியஸ்டரை கொடுத்தது அம்பலம்!