
கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் SFI செயற்பாட்டாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதோடு, அங்குள்ள ஊழியர்களையும் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவம் குறித்து கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தின் மீதான இந்த தாக்குதலுக்கு இந்திய பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தில் இதுபோன்ற தாக்குதல்களுக்கு இடமில்லை என்றும் இந்த சம்பவம் குறித்து விரைவில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேரள அரசை இந்திய பிரஸ் கிளப் வலியுறுத்தி உள்ளது.
SFI செயற்பாட்டாளர்களின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “செய்திக்கு எதிராக புகார் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதைவிட்டுவிட்டு இதுபோன்று ஊடக நிறுவனத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இதற்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். இதற்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... பைனாகுலர் வச்சு பார்த்தாலும் காங்கிரஸை காணோம்... அமித் ஷா விமர்சனம்!!
ஏசியாநெட் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஊடக சுதந்திரத்தை முடக்கும் முயற்சி என எம்.பி. என்.கே.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “ஊடக சுதந்திரத்தின் மீது துளியும் அக்கறை இல்லாத கேரள முதலமைச்சரும், சிபிஎம் கட்சியும் தங்களை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை கைவிலங்கிடுவது மட்டுமின்றி, அவர்களை விளையாட்டுத்தனமாக நடத்துவார்கள் என்பதை இந்த தாக்குதல் தெரிவிக்கிறது.
மத்திய அரசு அமல்படுத்திய கொள்கைகளையே சிபிஎம் கட்சியும் கேரளாவில் செயல்படுத்தி வருகிறது. இவர்கள் மத்திய அரசை விமர்சிக்கிறார்கள். SFIயும் DYFIயும் சமூக விரோத இயக்கங்களாக மாறிவிட்டது என எம்.பி என்.கே.பிரேமச்சந்திரன் கடுமையாக சாடி உள்ளார்.
இதையும் படியுங்கள்... தானாக ஸ்டார்ட் ஆகி கடைக்குள் நுழைந்த டிராக்டர்... இணையத்தில் வைரலான வீடியோ!!