"பதவி விலகுங்கள் உர்ஜித், இல்லன்னா கொன்னுடுவோம்"- ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொலை மிரட்டல்

First Published Mar 5, 2017, 4:10 PM IST
Highlights
Patel urjit demanding the resignation of the governor of the Reserve Bank Police arrested a man who made a death threat by emai


ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜிட் படேலை பதவி விலகக் கோரி  மின்அஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மின்அஞ்சல்

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு கடந்த மாதம் 23-ந்தேதி ஒரு மின் அஞ்சல் வந்தது. அதில் கவர்னர் பதவியில் இருந்து விலக வேண்டும், இல்லாவிட்டால் குடும்பத்தாரையும், உங்களையும் கொலை செய்து விடுவேன் என்று கூறப்பட்டு இருந்தது.

புகார்

இதையடுத்து அந்த மின்அஞ்சலை ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கிமூத்த அதிகாரிக்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்யக் கூறினார். அவர் அந்த மின் அஞ்சலை ஆய்வு செய்தபின், அது குறித்து மும்பையில்உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

கைது

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நாக்பூரில் உள்ள இன்டர்நெட் மையத்தில் இருந்து இந்த மின் அஞ்சல் அனுப்பப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன்பின் தனிப்படையினர் நாக்பூர் சென்று மின் அஞ்சல் அனுப்பி நபரை கைது செய்ததில் அவர் பெயர்வைபவ் பதால்வார் என்பது தெரியவந்தது.

சர்வர்

இது குறித்து சைபர் கிரைம் துணை ஆணையர் அகிலேஷ் குமார் சிங் கூறுகையில், “ எங்களுக்கு கிடைத்த மின் அஞ்சலை வைத்து சர்வரை தேடியதில், அது நாக்பூரில் இருந்து அனுப்பப் பட்டுள்ளதை கண்டுபிடித்தோம். அதன்பின், அந்த இன்டர்நெட் மையத்தில் ஆய்வு செய்து, அந்த நபரை கண்டுபிடித்தோம்.

 

வேலையில்லா பட்டதாரி

அவர் பெயர் வைபவ் பதால்வார். பட்டப்படிப்பு படித்துள்ள வைபவ் வேலையில்லாமல் இருக்கிறார். இவருக்கு ஏதேனும் அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் அவரின் வீட்டிலும் சோதனை நடத்தினோம். அதன்பின் வைபவை நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். நீதிபதி மார்ச் 6-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்'' என்றார்.

 

click me!