
உத்தரப்பிரதேசத் தேர்தலை முன்னிட்டு வாரணாசிக்கு சென்ற மோடி பெருந்திரள் கூட்டத்திற்குள் பாதுகாப்புத் தடைகளை மீறி நுழைந்த்து பரபரப்பா ஏற்படுத்தி உள்ளது.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதே சட்டசபைத் தேர்தல் ஏறாத்தாழ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் வரும் 8 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கிடையே தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றிருந்தார். அப்போது இந்திய சுதந்திர போராட்ட வீர்ரும், கல்வியாளருமான மதன் மோகன் மாளவியா சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த மக்கள் திரளுக்குள் பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் மீறி மோடி தனது காரின் மூலம் நுழைந்தார். அப்போது இருபுறமும் குவிந்திருந்த தொண்டர்கள் மலர் தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் மோடிக்கு மாபெரும் வரவேற்பு என வட இந்திய ஊடகங்கள் அலற அதனை காசுக்கு வந்த கூட்டம் என்று காட்டமாக கலாய் கொடுத்திருக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி….
மோடியை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அதேவேளையில் அகிலேஷ் – ராகுல் காந்தி ஜோடிக்கும் கூட்டம் அலைமோதுகிறது…… உத்தரப்பிரதேச மக்கள் தங்களது வாக்குச்சீட்டுகளால் யாரை வாழ்த்தப் போகிறார்கள் ! யாரை வீழ்த்தப் போகிறார்கள் என்பதற்கான பதில் வெகுவிரைவில் தெரிந்துவிடும்……