மணிப்பூர் முதல்கட்ட தேர்தலில் 84 சதவீத வாக்குப்பதிவு

First Published Mar 4, 2017, 10:51 PM IST
Highlights
Manipur 1st phase election


மணிப்பூர் முதல்கட்ட தேர்தலில் 84 சதவீத வாக்குப்பதிவு

மணிப்பூரில் முதல்கட்டமாக 38 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 84 சதவீத வாக்குகள் பதிவானது.

38 தொகுதிகள்

மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, விஷ்ணுப்பூர் மற்றும் மலை மாவட்டங்களான சுராசந்த்பூர் மற்றும் கங்போக்பி ஆகிய மாவட்டங்களில் இந்த 38 தொகுதிகள் வருகின்றன. வாக்குப்பதிவை முன்னிட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து. வாக்காளர்கள் வசதிக்காக 1,643 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

வாக்கு சதவீதம் உயர்வு

இவற்றில் நேற்று காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 84 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே 38 தொகுதிகளில் கடந்த 2012-ல் தேர்தல் நடத்தப்பட்டது.

11-ல் முடிவு

அப்போது 77.18 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த கட்டமாக மீதமுள்ள 22 தொகுதிகளில் மார்ச் 8-ந்தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மணிப்பூர், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும் 11-ந்தேதி ெவளியாகிறது.

பாஜக-காங்கிரஸ்

மணிப்பூரில் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. 16 ஆண்டுகாலமாக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டு தற்போது கட்சியை தொடங்கியிருக்கும் இரோம் சர்மிளா இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளார். அவரது மக்கள் எழுச்சி மற்றும் நீதிக்கான கூட்டணி கணிசமான வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!