குஜராத்திகள் இல்லையென்றால் இங்கு ஒன்றுமில்லை..சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் !

By Raghupati RFirst Published Jul 30, 2022, 9:04 PM IST
Highlights

‘குஜராத்திகள் மற்றும் ராஜஸ்தானியர்கள் இல்லையென்றால் மும்பை மற்றும் தானேவில் எதுவும் மிச்சமிருக்காது ‘என்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா குறித்து ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே மற்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.  மும்பை அந்தேரியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டிட திறப்பு விழாவில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கலந்து கொண்டார்.  

மேலும் செய்திகளுக்கு..உண்மையான அதிமுக எடப்பாடி தான்.. மகிழ்ச்சியில் இருந்த இபிஎஸ் தரப்புக்கு 'ஓபிஎஸ்' கொடுத்த ட்விஸ்ட் !

அப்போது பேசிய அவர், ‘குஜராத்திகள் மற்றும் ராஜஸ்தானியர்கள் மகாராஷ்டிராவில் இருந்து விலக்கப்பட்டால், மாநிலத்தின் பொருளாதாரத் துறையில், குறிப்பாக மும்பை மற்றும் தானேவில் எதுவும் மிச்சமிருக்காது. மும்பை நாட்டின் நிதி தலைநகரமாக இருக்க முடியாது’ என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசினார். 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

ஆளுநரின் இந்த சர்ச்சை கருத்து சர்ச்சையை கிளப்ப, ஆளுநர் மாளிகை வட்டாரம் சர்ச்சை கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளது. ‘மும்பையை நாட்டின் நிதித் தலைநகராக மாற்றியதில் ராஜஸ்தானியர்கள் மற்றும் குஜராத்தியர்களின் பங்களிப்பை மகிமைப்படுத்துவதுதான்’ என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது. இருப்பினும் ஆளுநர் கூறிய இந்த கருத்து மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது என்றே கூற வேண்டும். 

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

click me!