ஐயோ மேடம் என்ன மன்னிச்சிடுங்க.. தெரியாம உளறிட்டேன் , ஓவரா பேசி உடம்பை புண்ணாக்கிக் கொண்ட காங் எம்.பி.

By Ezhilarasan Babu  |  First Published Jul 30, 2022, 1:16 PM IST

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்ழு குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் எம்பி ஆதீர் ரஞ்சன் சௌத்ரி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். நா தவறி அப்படி பேசி விட்டதாகவும்  மன்னிப்பு கடிதத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.


குடியரசுத்தலைவர் திரௌபதி முர்ழு குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் எம்பி ஆதீர் ரஞ்சன் சௌத்ரி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். நா தவறி அப்படி பேசி விட்டதாகவும்  மன்னிப்பு கடிதத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் காங்கிரஸ் எம்.பி ஆதீர் ரஞ்சன் சௌத்ரி. இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில் குடியரசுத் தலைவர் முர்மு குறித்து  சர்ச்சைக்குரிய வார்த்தையில் பேசினார் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது, அவரின் பேச்சுக்கு நாடு முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கூடிய நிலையில், ஆதிர் ரஞ்சன் சௌத்ரியின் பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனாதிபதி வேட்பாளராக முடிவு அறிவிக்கப்பட்டது முதலிருந்தே காங்கிரஸ் கட்சி அவர் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகிறது என்றார்.

Tap to resize

Latest Videos

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுமென்றே குடியரசுத் தலைவரை அவமரியாதையாக பேசியுள்ளார், வாய் தவறி பேசி விட்டதாக மழுப்புகிறார், அவர் வேண்டுமென்றேதான் அநாகரீகமாக பேசியிருக்கிறார், அவரின் பேச்சுக்கு காங் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முர்முவை அவமதிப்பதாக கூறி ஒட்டுமொத்த பழங்குடி இன சமூகத்தையும், பெண்களையும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவமதித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினார்.

இந்நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு எதிராகவும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தீவிரம் அடைவதைக் உணர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், " நான் தாங்கள் வகிக்கும் பதவியை குறிப்பிட தவறான வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அது வாய் தவறி வந்த வார்த்தை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், இருப்பினும் நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன், எனது மன்னிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவர், இது நான் வாய் தவறி பேசிய வார்த்தை என்றும், தான் வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், தனக்கு ஹிந்தி அவ்வளவு நன்றாக பேச தெரியாது என்றும், அதனால் நா தவறி  பேசிவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். 
 

click me!