மும்பை தாராவியில் வேகமெடுக்கும் கொரோனா... 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 18, 2020, 5:22 PM IST
Highlights

இந்நிலையில் தாராவியில் இன்று ஒரே நாளில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. 

ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது மகாராஷ்டிர அரசிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றுடன் முடிந்த ஊரடங்கு உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருபுறம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினால், மறுபுறம் புதிய தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 

இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவிடம் அத்துமீறிய பிரபல நடிகர்... கோபத்தில் கொந்தளிக்கும் ரசிகர்கள்...!

காட்டுத்தீ போல் பரவும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளே திண்டாடி வருகின்றன. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் அம்மாநிலத்தின் தலைநகரான மும்பையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 3,200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 

இதையும் படிங்க: என்ன கன்றாவி போஸ் இது... ஊரடங்கிலும் அடங்காத ஷாலு ஷம்மு... கடுப்பான நெட்டிசன்கள்...!


தாராவியில் சுமார் 8 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், இதுவரை 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராவியில் இன்று ஒரே நாளில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் மிகவும் நெருக்கமாக வாழும் தாராவி பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு ஹைட்ரோகுளோரோகுயின் மருத்தை பரிந்துரைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
 

click me!