அதிரடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு.! ஒரே நாளில் 12,591 பேருக்கு கோவிட் தொற்று..! 40 பேர் பலி- அச்சத்தில் மக்கள்

By Ajmal KhanFirst Published Apr 20, 2023, 11:19 AM IST
Highlights

கொரோனா தொற்று கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில் மீண்டும் இன்று அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 12,591 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா

கொரோனா பாதிப்பின் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீடுகளுக்குள் முடங்கி தவித்த மக்கள் தற்போது தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழாக பதிவாகி வந்தது. ஆனால் இந்த பாதிப்பு தற்போது 10 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு மூன்று தினங்களாக குறைய தொடங்கியது. நேற்று முன் தினம் 7 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு இன்று 12,591 ஆக பதிவாகியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 63,562-லிருந்து 65,286 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பிரிட்டன் பள்ளிகளில் இந்து வெறுப்பு அதிகரிப்பு: ஹென்றி ஜாக்சன் சொசைட்டி ஆய்வில் தகவல்

இந்தியாவில் 40 பேர் பலி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 283 பேர் ஆண்களாகவும், 259 பேர் பெண்களாகவும் உள்ளனர்.சென்னையில் தினசரி தொற்று பாதிப்பு 116 ஆகவும், கோவையில் 75 பேரும், கன்னியாகுமரியில் 35 பேரும், திருப்பூரில் 28 பேரும், சேலத்தில் 27 பேரும், திருவள்ளூரில் 26 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் 12 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சூரத் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
 

click me!