ரூ. 133 கோடியில் இலவச சைக்கிள்; ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் பிளான்!!

By Dhanalakshmi GFirst Published Apr 20, 2023, 11:13 AM IST
Highlights

ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைய உள்ளது.. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. அங்கு காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வரும் நிலையில் தற்போது, ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் அரசு, பள்ளி மாணவிகளுக்கான இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்குள் சைக்கிள் விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது.. இதற்காக ரூ.133 கோடி மதிப்பீட்டில் சைக்கிள்களை வாங்க அசோக் கெலாட் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Karnataka Elections 2023: டி.கே.சிவகுமார் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்த இலவச சைக்கிள்களை வாங்குவதற்கான டெண்டர்களை அரசு நேற்று வெளியிட்டதாக தெரிகிறது.. அதன்படி, அடுத்த 3  மாதங்களுக்குள் சைக்கிள்களை வாங்கவும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அதனை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த ஆண்டு ராஜஸ்தானில்  நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் முடக்கப்பட்ட நிலையில், தற்போது வாக்காளர்களைக் கவரும் வகையில், ராஜஸ்தான் அரசு இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு அசோக் கெலாட் அரசு, முதன்முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது.. பெண்களின் கல்வி மற்றும் மாணவர் சேர்க்கையை மேம்படுத்தும் வகையில் பெண்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் 2013 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜகவும் இந்த திட்டத்தை தொடர்ந்தது.. எனினும் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு, சைக்கிள்களின் நிறத்தை காவி நிறமாக மாற்றியதால், காங்கிரஸ் அதனை கடுமையாக விமர்சித்தது. 

எனினும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் காரணமாக மாணவிகளின் இடைநிற்றல் விதிகம் குறைந்துள்ளதாகவும் கல்வியறிவு விகிதம் மேம்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் புதிதாகச் சேரும் அனைத்துப் பள்ளி மாணவிகளுக்கும் அரசு வழங்கிய வழிகாட்டுதலின்படி சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.. எனினும் 9 ஆம் வகுப்பு தவிர, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று அசோக் கெலாட் அரசாங்கம் சமீபத்தில் முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. தேர்தல் ஆணையம் முடிவு அறிவிப்பதில் சிக்கல்? அதிர்ச்சியில் இபிஎஸ்?

click me!