4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் கட்டணம்…தனியார் வங்கிகள் அதிரடி அறிவிப்பு…

Asianet News Tamil  
Published : Mar 02, 2017, 07:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் கட்டணம்…தனியார் வங்கிகள் அதிரடி அறிவிப்பு…

சுருக்கம்

Money transaction

4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் கட்டணம்…தனியார் வங்கிகள் அதிரடி அறிவிப்பு…

உயர்பண மதிப்புழப்பு நடவடிக்கையால் பொது மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஏடிஎம் களில் பணத்தட்டுப்பாடு நிலவியது. பொது மக்கள் பணம் எடுக்க முடியாமல் வங்கிகள் முன்பும், ஏடிஎம்கள் முன்பும் குவிந்தனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கு முன் ஏடிஎம்களில் 5 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும்  அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நடைமுறை இருந்தது.

பொது மக்களின் வசதிக்காக கடந்த 4 மாதங்களாக ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு கட்டணம் எதுவும்  வசூலிக்கப்படவில்லை.

இந்நிலையில் பண மதிப்பிழப்பு பிரச்சனைக்கு பிறகு பணப்புழக்கம் மீண்டும் சீரடைய தொடங்கியுள்ளதால், தனியார் வங்கிகள் பரிவர்த்தணைகளுக்கு  வசூலிக்கும் குறைந்தபட்ச அளவு கட்டணத்தை மீண்டும் வசூலிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி  ஒரு மாதத்திற்கு ஒருவர் தனது கணக்கில் 4 முறை மட்டுமே இலவசமாக பணத்தை வங்கிகளில் வைப்பு வைக்கலாம்  அல்லது பணத்தை எடுக்கலாம்.

அதற்கு மேல் பரிவர்த்தணை மேற்கொள்ளும் ஒவ்வொரு கணக்குக்கும் குறைந்த பட்ச தொகை  வசூலிக்கப்பட உள்ளது. 4வது முறைக்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு பணபரிவர்தனைக்கும் பணம் வசூலிக்கப்படும். 150 ரூபாய் வரை  வசூலிக்கபடும் .

இந்த முறை இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் வங்கிகள்  தெரிவித்துள்ளன.



சேமிப்பு கணக்கு, சம்பள கணக்கு வைத்துள்ளவர்களும் 4 முறைக்கு மேல் பரிவர்த்தணை மேற்கொண்டால் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!