திடீரென “ஷிர்டி பாபா” ஒளியாக மாறிய ஆச்சர்யம்...! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்...

Asianet News Tamil  
Published : Mar 01, 2017, 02:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
திடீரென “ஷிர்டி பாபா” ஒளியாக மாறிய ஆச்சர்யம்...! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்...

சுருக்கம்

saibaba apperaed as light in karnataka state

திடீரென “ஷிர்டி பாபா” ஒளியாக மாறிய ஆச்சர்யம்...! 

ஷிர்டி பாபா

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள, மைசூர் மாவட்டத்தில் உள்ள  சாய்பாபா  கோவில் உள்ள, “ஷிர்டி பாபா” திடீரென  ஒளி  உருவில் தோன்றிய காட்சி  சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது .  

கோவிலில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கடந்த 27 ஆம் தேதி , எதேச்சையாக சிசிடிவி கேமரா  பதிவை  பார்த்துள்ளார் . அப்போது, பாபா  ஒளி உருவில்  தோன்றிய காட்சியை  பார்த்ததாக அவர்  தெரிவித்தார் .

கோவில்  நிர்வாகி  கூறியது என்ன ?

 தான் காலை 7.30 மணி அளவில் சிசிடிவி அறையில்  அமர்ந்து, எத்தேச்சையாக சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்துக் கொண்டு  இருந்ததாகவும், அப்போது, திடீரென அந்த வீடியோவில் இருந்து ஷிர்டி சாய்பாபாவின் ஒளி வடிவம்  தெரிந்ததாகவும்  குறிபிட்டுள்ளார் .

வெள்ளை நிற உருவம்

சிசிடிவியில், வெள்ளை நிறத்தில் அந்த உருவம் காணப்பட்டது என்றும், உடனடியாக நான் ஒளி உருவம் தோன்றிய இடத்திற்கு ஓடிச்  சென்று பார்த்த  போது அங்கு அந்த ஒளி உருவம் இல்லை என்றும்  குறிபிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்தக் கோயிலுக்கு பாபாவைப் பார்க்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்து  வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானுடன் ஒன்றிணையும் 2 முஸ்லிம் நாடுகள்.. உலகமே நடுங்கும் பேராபத்தான ஒப்பந்தம்..!
சித்திரவதையின் நரகம்..! பாஜக ஆட்சியில் நாட்டில் பரவும் பேராசையின் தொற்றுநோய்... ராகுல் அட்டாக்..!