
கர்நாடக மாநிலத்தில் விற்பனை வரி உதவி ஆணையாளர் வீட்டில் 7000 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் விஸ்வேஸ்வர் நகரில் கரியப்பா கெர்னர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விற்பனை வரி உதவி ஆணையாளராக உள்ளார்.
கரியப்பா கெர்னர் லஞ்சம் வாங்குவதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில், கரியப்பா கெர்னர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து சுமார் 7000 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒவ்வொரு சேலையும் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.