
ராஜஸ்தானில் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்க பெற்றோர் மறுத்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான், பண்டி மாவட்டத்தை சேர்ந்த 9-வது வகுப்பு படிக்கும் 18 வயது இளைஞர் ஒருவர் அன்றாட கூலி வேலை செய்யும் தனது பெற்றோரிடம் விலைமதிப்பு மிக்க ஸ்மார்ட் போன் வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்துள்ளார். வறுமையில் வாடும் அவனது பெற்றோர்கள் வாங்கி கொடுக்க மறுத்துள்ளனர்.
இதையடுத்து பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த மாணவர் தனது வீட்டின் அருகே இருக்கும் ஒரு கல்குவாரியில் உள்ள ஆழமான கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்தை கண்ட இளைஞரின் சகோதரர் பெற்றோரிடம் சென்று தெரிவித்துள்ளார். ஆனால், அதற்குள் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.