இன்டர்நெட் தேவைப்படாத புதிய ‘பீம் ஆப்ஸ்’…எப்படி வேலை செய்கிறது? யார், எந்த போனில் பயன்படுத்தலாம்? அனைத்தையும் தெரிஞ்சுங்க...

First Published Dec 31, 2016, 6:49 AM IST
Highlights


இன்டர்நெட் தேவைப்படாத புதிய ‘பீம் ஆப்ஸ்’…எப்படி வேலை செய்கிறது? யார், எந்த போனில் பயன்படுத்தலாம்? அனைத்தையும் தெரிஞ்சுங்க...

நாட்டு மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி டெல்லியில் இன்டர்நெட் தேவைப்படாத ‘பீம்’ செயலியை நேற்று அறிமுகம் செய்தார்.

இந்த பீம் செயலியை எப்படி பயன்படுத்துவது, எந்த மொபைலில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

பீம் என்றால் என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய வங்கி அமைப்பு ஆதரவோடு, தேசிய பேமெண்ட்கார்ப்பரேஷன் மூலம் யு.பி.ஐ. அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ‘பீம்’ செயலி(ஆப்ஸ்). வங்கிக்கணக்கு மூலம் யாவரும் மிக எளிதாக பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில் பீம் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

எப்படி இயங்குகிறது?

இந்த பீம் ஆப்ஸை செல்போனில் டவுன்லோட் செய்த யாவரும் எளிதாக பணத்தை ஒரு வங்கிக்கணக்கில் இருந்து பெறவும், மற்றொரு வங்கிக்கணக்குக்கு அனுப்பவும் முடியும். இ-வாலட் போன்று பணத்தை சேமிக்கத் தேவையில்லை. நேரடியாக வங்கிக்கணக்குக்கு பணம் பரிமாற்றம் ஆகும்.

எப்படி பயன்படுத்துவது?

பீம் ஆப்ஸை டவுன்லோடு செய்து அதில் வங்கிக்கணக்கை நாம் பதிவு செய்து யு.பி.ஐ. பின்நம்பரை உருவாக்க வேண்டும். இதில் நம்முடைய மொபைல்நம்பர்தான் பேமெண்ட் அட்ரசாக எடுத்துக் கொள்ளப்படும். அதன்பின் மொபைல்நம்பரை வைத்து பணத்தை அனுப்ப முடியும், பெற முடியும், வங்கிக்கணக்கு இருப்பை அறியலாம். ‘கியூ ஆர் கோட்’ மூலம் நாம் செல்நம்பரை பணம் யாருக்கும் தெரிவிக்காமல் பணம் அனுப்பலாம்.

எந்த மொபைல் போனில் பயன்படுத்தலாம்?

பீம் ஆப்ஸ் முதல்கட்டமாக ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் மட்டும் பயன்படுத்தமுடியும். கூகுள் ‘ப்ளே ஸ்டேரில்’ இதற்குரிய ஆப்ஸை பதிவிறக்கம் செய்யலாம். அதேசமயம் விரைவில் ஆப்பிள் ஸ்டோரில் கொண்டு வரப்படும்.

சாதாரண செல்போன் வைத்துள்ளவர்கள் பயன்படுத்தலாமா?

ஸ்மார்ட்போன் இல்லாமல் சாதாரன மொபைல்போன் வைத்துள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. *99# என்ற எண்ணைடயல்செய்து நமக்கு தேவையான அனைத்து விவரங்களையும்  பெற்று, பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும்.

எவ்வளவு அனுப்பலாம், பெறலாம்?

பிம் செயலியை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம்  ஒரு ரூபாய் முதல், அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை அனுப்பலாம். ஒருமுறை அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே அனுப்பவோ அல்லது பெறவோ முடியும்.

எந்தமொழிகளில் வந்துள்ளது?

தொடக்கத்தில் இப்போது, இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பிம்ஆப்ஸ் வந்துள்ளது. விரைவில் மாநில மொழிகள் அனைத்திலும் வரும்.

எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் பயன்படுத்தலாம்?

பிம் ஆப்ஸ், அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பேங் ஆப் பரோடா,பேங்க் ஆப் இந்தியா, பேங் ஆப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, டி.சி.பி. வங்கி, டினா பேங்க், பெடரல் பேங்க், எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.எப்.சி. வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன்ஓவர்சிஸ் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, கர்நாடக வங்கி, கரூர் வைஸ்யா வங்கி,கோட்டக் மகிந்திரா வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேசஷனல் வங்கி, ஆர்.பி.எல். வங்கி, சவுத் இந்தியா வங்கி, ஸ்டான்ர்ட் சார்ட்டர்ட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப்இந்தியா, சின்டிகேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி ஆகியவற்றில் கணக்கு வைத்துள்ளவர்கள் பயன்படுத்தலாம்

tags
click me!