வங்கிக் கடனுடன் அனைவருக்கும் வீடு - மோடியின் அடுத்த அதிரடி

First Published Nov 29, 2016, 4:53 PM IST
Highlights


நாட்டில் அனைத்து மக்களுக்கும் சொந்த வீடு  என்பது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகும். அதை செயல்படுத்தும் விதமாக, 6 சதவீத வட்டியில் வங்கிக் கடன் அளித்து, புதிய வீடுகள் கட்டிக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

இதற்கான முறையான அறிவிப்பு 2017-18ம் ஆண்டு பொது பட்ஜெட்டில் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி, தற்போது ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பின் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் அளிக்கப்படும். இந்த புதிய திட்டத்தின் மூலம், நாட்டின் ரியல் எஸ்டேட், மற்றும் வீட்டுகட்டும் துறையை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ்வங்கியுடனும் மத்திய அரசு ஆலோசித்து விட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த திட்டத்துக்கான முறைப்படி அறிவிப்பு அடுத்த நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். ரூபாய்நோட்டு செல்லாத அறிவிப்பின் மூலம் சிக்கும் கருப்பு பணம் மற்றும் வரி வருவாயை முடிவு செய்தபின் இந்த திட்டம் இறுதி செய்யப்படும். 



அனைவருக்கும் வீடு என்ற இந்த திட்டத்தில் சமானிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் மிகமிக குறைந்த வட்டியான 6 முதல் 7 சதவீதத்துக்குள், அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சொந்தமாக வீடு இல்லாதவர்கள், முதல்முறையாக வங்கியில் கடன் பெறுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

மத்திய அரசின் ரூபாய் நோட்டு விவகாரத்தில், நாட்டின்  ரியல் எஸ்டேட் துறை கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. வீடுகளின் விற்பனையும் கடுமையாகச் சரிந்துள்ளது. இந்த சூழலில் ரியல் எஸ்டேட் துறையையும், வீட்டு வசதித் துறையையும் மேம்படுத்தும் வகையில், ஊக்கப்படுத்தும் வகையில் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கி  உற்சாகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

click me!