‘மாதவிடாய் என்பது குறைபாடு அல்ல’: பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்கு ஸ்மிருதி இரானி எதிர்ப்பு

By Ramya s  |  First Published Dec 14, 2023, 11:46 AM IST

பெண் ஊழியர்களுக்கு கட்டாய ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு என்ற யோசனைக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


புதன்கிழமை ராஜ்யசபாவில் எம்.பி மனோஜ் குமார் ஜா எழுப்பிய கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதிலளித்தார். அப்போது மாதவிடாய் என்பது வாழ்க்கையின் இயற்கையான பகுதி என்றும், சிறப்பு விடுப்பு ஏற்பாடுகள் தேவைப்படும் ஊனமாக கருதக்கூடாது என்றும் கூறினார். மேலும் "மாதவிடாய் இருக்கும் பெண்ணாக, மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு அல்ல, அது பெண்களின் வாழ்க்கை பயணத்தின் இயல்பான பகுதியாகும்" என்று இரானி கூறினார்.

மாதவிடாய் விடுப்பு என்பது பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்த அவர், "மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் இருப்பதால் பெண்களுக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்சினைகளை நாங்கள் முன்மொழியக்கூடாது." என்று கூறினார்.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இருப்பினும், மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்ட இரானி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தேசிய கொள்கை வரைவை உருவாக்குவதாக அறிவித்தார். பங்குதாரர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கொள்கை, விழிப்புணர்வு மற்றும் நாடு முழுவதும் முறையான மாதவிடாய் சுகாதார மேலாண்மை நடைமுறைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

10 முதல் 19 வயது வரையிலான பருவப் பெண்களை இலக்காகக் கொண்டு, தற்போதுள்ள 'மாதவிடாய் சுகாதார மேலாண்மை (எம்எச்எம்) ஊக்குவிப்பு' திட்டத்தையும் மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார். தேசிய சுகாதார இயக்கத்தால் ஆதரிக்கப்படும் இந்தத் திட்டம், பல்வேறு கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அறிவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த அறிவிப்பு திங்களன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து, சிறப்பு மாதவிடாய் விடுப்பு விவகாரம் சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது மற்றும் பரிசோதனைக்காக சுகாதார அமைச்சின் வரம்புக்கு உட்பட்டது என்று சுட்டிக்காட்டியது.

மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

எவ்வாறாயினும், இந்தியச் சூழலில், அனைத்து பணியிடங்களிலும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பைக் கட்டாயமாக்குவதற்கான எந்த முன்மொழிவும் தற்போது அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்று டிசம்பர் 8 அன்று காங்கிரஸ் எம்பி சசி தரூரின் கேள்விக்கு ஸ்மிரிதி இரானி தெளிவுபடுத்தினார்.

மாதவிடாய் விடுப்பு என்ற தலைப்பு ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. சமீபத்தில் ஸ்பெயின் அரசு இதுகுறித்து சட்டத்தை இயற்றியது. அதன்படி மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் மாறியது என்[பது குறிப்பிடத்தக்கது.

click me!