பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் காரிலும் எஞ்சின் ஆயில் மாற்றணுமா?

By SG Balan  |  First Published Dec 13, 2023, 9:40 PM IST

மின்சார வாகனத்தின் எஞ்சின் பெரும்பாலும் காற்றால் குளிர்விக்கப்படுகிறது என்பதால், அவை ஒழுங்காக செயல்பட ஆயில் ஊற்றவேண்டிய தேவை இல்லை.


தற்போது எலெக்ட்ரிக் கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. பலர் ஆர்வமுடன் அவற்றை வாங்க முன்வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப கார் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய புதிய மின்சார கார்களை அறிமுகம் செய்கின்றன. இந்தக் கார்களை வாங்குபவர்களுக்கு அவற்றைப் பராமரிப்பது குறித்து பல கேள்விகள் எழுகின்றன.

குறிப்பாக பலருக்கும் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் வழக்கமான காரைப்போல, எலெக்ட்ரிக் காரிலும் எஞ்சின் ஆயில் ஊற்ற வேண்டுமா எனக் கேள்வி எழுகிறது.

Tap to resize

Latest Videos

மொபைல் ஸ்டோரேஜ் நிரம்பி வழியுதா? வாட்ஸ்அப் செட்டிங்ஸை கொஞ்சம் மாற்றிப் பாருங்க!

எஞ்சின் ஆயில் தேவையா?

மின்சார கார்கள் மின்சார வாகன எஞ்சினை (EV) பயன்படுத்துகின்றன. இவை பெட்ரோல டீசலில் இயங்கும் கார்கள் பயன்படுத்தும் ICE எஞ்சின்களில் இருந்து மிகவும் வேறுபட்டவை. ஒரு ICE எஞ்சின் பல்வேறு பகுதிகளைக் கொண்டது. அவை அனைத்தும் ஒன்றாகச் செயல்பட்டு காரை நகர்த்தச் செய்ய வேண்டும்.

ஆனால் மின்சார் கார்களில் உள்ள மோட்டார்களில் பல பாகங்கள் இருப்பதில்லை. அதனால்தான் எலக்ட்ரிக் கார் எஞ்சினுக்கு ஆயில் தேவையில்லை. ICE என்ஜினை பயன்படுத்தும்போது தான் எஞ்சின் அதிக வெப்பமடையாமல் இருக்கவும் சேதமடையாமல் இருக்கவும் ஆயில் ஊற்றுவது அவசியம்.

மின்சார வாகனத்தின் எஞ்சின் பெரும்பாலும் காற்றால் குளிர்விக்கப்படுகிறது என்பதால், அவை ஒழுங்காக செயல்பட ஆயில் ஊற்றவேண்டிய தேவை இல்லை.

எலெக்ட்ரிக் கார் பராமரிப்பு

பெட்ரோல் டீசலில் இயங்கும் காரைப் போல எலெக்ட்ரிக் காருக்கு எஞ்சின் ஆயில் மாற்றத் தேவையில்லை என்பதால், எலக்ட்ரிக் கார் வைத்திருப்பவர்கள் அந்தச் செலவை மிச்சப்படுத்தலாம். ஆனால், எலக்ட்ரிக் கார் என்றால் பராமரிப்பே தேவை இல்லை என்று கருதக்கூடாது. எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளர் வழங்கும் வழிகாட்டுதல்படி எப்பொழுதும் காரின் நிலையைச் செக் செய்ய வேண்டும். எலெக்ட்ரிக் காரையும் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தின் ஆலயத்துக்கு ஆபத்து வந்துவிட்டது!: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

click me!