மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

By SG Balan  |  First Published Dec 13, 2023, 7:52 PM IST

பிரிவு 86, ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்களால் இழைக்கப்படும் கொடுமையை வரையறுக்கிறது. இந்தக் குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறுகிறது.


காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டத்தை (IPC) மாற்றுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட பாரதிய நியாய (இரண்டாம்) சன்ஹிதா மசோதா, 2023, இரண்டு புதிய விதிகளை உள்ளடக்கி இருக்கிறது.

திருமண உறவில் பெண்களுக்கு எதிரான கொடுமையை வரையறுத்துள்ளது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்துவத்தை தவிர்க்கும் நோக்கில் அந்த வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இது தவிர, மேலும் இரண்டு குற்றவியல் திருத்தச் சட்ட மசோதாக்களையும் செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். பாரதீய சக்ஷ்யா (இரண்டாவது) சன்ஹிதா, மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா (இரண்டாம்) சன்ஹிதா என்ற அந்த இரண்டு சட்டங்களும் இந்திய சாட்சியச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) ஆகியவற்றை மாற்றியமைக்கின்றன.

மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களை வளைத்துப் பிடித்த பாஜக எம்.பி. ஆர்.கே. சிங் படேல்!

தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த மூன்று குற்றவியல் திருத்தச் சட்ட மசோதாக்கள் மீது வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

முதன்முதலில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள், அதே மாதத்தில் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டன. குழுவின் பரிந்துரைகளைப் பெற்று, அவற்றின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்து. எனவே முந்தைய மசோதாக்களைத் திரும்பப் பெறுவதாகவும் அமித் ஷா கூறினார்.

திருத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா மசோதா நடைமுறையில் உள்ள சட்டத்துடன் இரண்டு புதிய பிரிவுகளைச் சேர்க்கிறது. பிரிவு 73, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய நீதிமன்ற நடவடிக்கைகளை அச்சிடுவது அல்லது வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாக ஆக்குகிறது, அத்தகைய வெளியீடு நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் இருந்தால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் மற்றொரு சேர்க்கையான பிரிவு 86, ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்களால் இழைக்கப்படும் கொடுமையை வரையறுக்கிறது. இந்தக் குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறுகிறது.

புதிய மசோதா, கும்பல் கொலையை ஒரு தனித்துவமான குற்றமாகக் கருதும் விதியிலிருந்து ஒரு முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளது. இனம், ஜாதி அல்லது சமூகம், பாலினம், பிறந்த இடம், மொழி, தனிப்பட்ட நம்பிக்கை அல்லது வேறு எந்த அடிப்படையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழு கொலை செய்தால், அத்தகைய குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது.

கும்பல் கொலை குற்றத்திற்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது ஏழு வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று தற்போதைய சட்டம் கூறுகிறது. திருத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் ஏழு ஆண்டுகள் என்ற குறிப்பு மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறுகிறது.

ரூ.6000 நிவாரணத் தொகை யாருக்குக் கிடைக்கும்? தமிழக அரசின் அரசாணை வெளியீடு

click me!