அடப்பாவிகளா... நாய்களை மூட்டை கட்டி ஆற்றில் வீச முயற்சி! வைரல் வீடியோவை வைத்து 2 பேர் கைது!

By SG Balan  |  First Published Aug 4, 2024, 3:59 PM IST

நந்து பன்ஷ்கர் மற்றும் பிரதீப் பன்ஷ்கர் இருவரும் நாய்களை பாலத்தில் இருந்து சத்னா ஆற்றில் வீச திட்டமிட்டனர் என்று போலீசார் கூறுகின்றனர்.


மத்தியப் பிரதேசத்தின் சத்னாவில் 6 தெருநாய்களைக் கட்டி, சாக்கு மூட்டைகளில் அடைத்து, ஆற்றில் மூழ்கடித்துக் கொல்ல முயன்ற இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வீடியோவைை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தில் ஒரு குழுவினர் நாய்களை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. அவர்கள் சாக்கு மூட்டைகளில் இருந்து குட்டிகளை வெளியே இழுத்து, வாய் மற்றும் கைகால்களை கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து அவற்றை விடுவித்தார்கள்.

Tap to resize

Latest Videos

undefined

நந்து பன்ஷ்கர் மற்றும் பிரதீப் பன்ஷ்கர் இருவரும் நாய்களை பாலத்தில் இருந்து சத்னா ஆற்றில் வீச திட்டமிட்டனர் என்று போலீசார் கூறுகின்றனர்.

ஆதாரங்களின்படி, நந்துவும் பிரதீப்பும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இ-ரிக்‌ஷாவில் சத்னா-மைஹார் சாலையில் உள்ள பாலத்திற்குச் சென்றனர்.

அன்புள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு... 3ஆம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சியான கடிதம்!

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த உள்ளூர்வாசிகளான பரிமல் திரிபாதி மற்றும் பிரிஜேஷ் யாதவ் இருவரும் ரிக்‌ஷாவில் உள்ள சாக்குகளில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. சாக்குகளுக்குள் ஏதோ நெளிந்துகொண்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

உடனே ரிக்‌ஷா ஓட்டுநரை நிறுத்தி விசாரித்தனர். ஏதோ சந்தேகம் வந்து சாக்கு மூட்டைகளில் ஒன்றைத் திறந்து பார்த்தார்கள். அதில், இருந்த நாய்களை விடுவித்தார்கள். நாய்களை மீட்கும் காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

பஜ்ரஹா தோலா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இந்த நாய்கள் சுற்றித் திருந்ததால் அவற்றை ஆற்றில் வீசி கொல்ல முயன்றுள்ளனர். விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்களின் கீழ் நந்து மற்றும் பிரதீப் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்துகின்றனர்.

இனி டெபாசிட் கணக்கில் 4 நாமினிகளை சேர்க்கலாம்! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

click me!