விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த திருமலா விரைவு ரயிலில் திடிரென தீ பிடித்தது. இதில் 3 ரயில் பெட்டிகள் எரிந்து சேதமான நிலையில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தொடரும் ரயில் விபத்து
பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தையே பெரும்பாலான பயணிகள் விரும்புவார்கள். இதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளாகும், இதனால் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே ரயில்வே நிர்வாகமும் கூடுதல் ரயில்களை இயக்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் ரயில்களில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டு பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.ஒடிசா ரயில் விபத்து, மேற்கு வங்கம் ரயில் விபத்து என தொடரும் ரயில் விபத்துகளால் ரயில் பயணிகள் மத்தியில் அச்சமான சூழல் எழுந்துள்ளது.
மீண்டும் ரயில் விபத்து
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த திருமலா விரைவு ரயிலில் தீ விபத்து
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
ரயில் நிலையத்தில் இருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சேதாரம் தவிர்ப்பு pic.twitter.com/qoWnBxKF0j
undefined
ரயில் பெட்டியில் தீ
இந்தநிலையில் தான் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சி அடையசெய்துள்ளது. இன்று காலை சத்தீஸ்கரின் கோர்பா நகரில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வந்தது. இந்த ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென B6, B7,M1 ஆகிய 3 பெட்டிகளில் தீயானது மளமளவென எரிய தொடங்கியது. இதனால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஓட தொடங்கினர்.
தீவிபத்து தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ரயில் நிலையத்தில் இருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சேதாரம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த தீ விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.