IPS Transfer : தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்.! யார் யார் எந்த இடத்திற்கு மாற்றம் தெரியுமா?
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த வாரம் பெரிய அளவில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழக அரசின் மக்கள் நல திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான பாலமாக மாவட்ட ஆட்சியர்கள் இருந்து வருகின்றனர். எனவே அரசு திட்டங்கள் சாதாரண மக்களுக்கு சென்று சேர்வதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அப்படி மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு உரிய வகையில் கொண்டு செல்லாத மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் அவ்வப்போது இடம் மாற்றம் செய்யப்படுவார்கள். மேலும் நிர்வாக வசதிக்காகவும் பணியிட மாற்றம் நடைபெறும். அந்த வகையில் கடந்த வாரம் உள்துறை செயலாளர் முதல் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் வரை மாற்றப்பட்டனர்.
tamilnadu police
ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
இந்தநிலையில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் உள்துறை செயலாளராக இருந்த அமுதா இடமாற்றம் செய்யப்பட்டு புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் காவல் ஆணையர் முதல் ஐஜிக்கள் வரை இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யார்.? யார் இடமாற்றம்.?
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக டிஜிபியாக மாற்றம்.
மேற்கு மண்ட காவல்துறை ஐஜியாக இருந்த பவானீஸ்வரி தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றம்.
தமிழக காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா நெல்லை நகர காவல் ஆணையராக மாற்றம்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பொறுப்பையும் கவனிப்பார்.
தமிழக காவல்துறை (பொது) ஐஜியாக இருந்த செந்தில் குமார் மேற்கு மண்டல காவல்துறை ஐஜியாக மாற்றம்.
ஐஜிக்கள் இடமாற்றம்
சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில் குமாரி தமிழக காவல்துறை குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம்.
தமிழக காவல்துறை நலன் பிரிவு ஐஜியாக இருந்த நஜ்மல் ஹோடா தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக மாற்றம்.
மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜியாக இருந்த மகேந்தர் குமார் ரத்தோட் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாக மாற்றம்.
சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாக இருந்த சாமூண்டீஸ்வரி தமிழக காவல்துறை (பொது) பிரிவு ஐஜியாக மாற்றம்.
தமிழக காவல்துறை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மாற்றம்.
Tamilnadu Police
நெல்லை ஆணையர் யார்.?
சென்னை காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த அபிஷேக் தீக்சித் ரயில்வே காவல்துறை டிஐஜியாக மாற்றம். (ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு பிறகு தற்போது இடமாற்றம்).
திண்டுக்கல் சரக டிஐஜியாக இருந்த அபிநவ் குமார் ராமநாதபுரம் சரக டிஐஜியாக மாற்றம்.
வேலூர் சரக டிஐஜியாக இருந்த சரோஜ்குமார் தாக்கூர் சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையராக மாற்றம்.
ராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்த துரை தமிழக காவல்துறை நலன் பிரிவு டிஐஜியாக மாற்றம்.
சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த தேவராணி வேலூர் சரக டிஐஜியாக மாற்றம்.
நெல்லை காவல் ஆணையராக இருந்த மூர்த்தி நெல்லை சரக டிஐஜியாக மாற்றம்.
நெல்லை சரக டிஐஜியாக இருந்த பர்வேஷ் குமார் சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றம்.