டாக்‍டர் பட்டம் வேண்டுமா? : எம்.பி.பி.எஸ். முடித்தாலும் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றாக வேண்டும்!

First Published Dec 31, 2016, 6:56 AM IST
Highlights


டாக்‍டர் பட்டம் வேண்டுமா? : எம்.பி.பி.எஸ். முடித்தாலும் தகுதித் தேர்வில் வெற்றி​பெற்றாக வேண்டும்!

M.B.B.S. படிப்பை முடித்த மாணவர்கள், டாக்‍டர் பட்டம் பெறுவதற்கு முன்பாக தகுதித் தேர்வு எழுதவேண்டும் என்ற புதிய திட்டத்தைக்‍ கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

M.B.B.S., B.D.S. உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஐந்தரை ஆண்டுகள் M.B.B.S., படிப்பை முடித்த மாணவர்கள், தங்களை மருத்துவர்களாக பதிவு செய்து கொள்ள மீண்டும் தேசிய அளவில் தகுதித் தேர்வை எதிர்கொள்ள வகை செய்யும் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் மற்றொரு திருத்தம் செய்து, புதிய வரைவுச் சட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் படித்து பட்டம் பெறும் மாணவர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் மருத்துவம் படித்த மாணவர்களுக்கும் சமவாய்ப்பு உருவாக்கப்படும். இதன்மூலம் மருத்துவர்களின் தகுதி உறுதி செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

tags
click me!