
2017-ம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்திய பெண் ஹரியானவை சேர்ந்த மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இன்று இரவு சீனாவில் நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 118 அழகிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மனுஷி சில்லர் கலந்து கொண்டார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த “மிஸ் இந்தியா 2017” போட்டியில் 29 மாநிலங்களைச் சேர்ந்த அழகிகளை வென்று, பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இதையடுத்து, உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளவிருக்கும் அழகியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மனுஷி சில்லர் ஹரியானாவிலுள்ள பகத் பூல் சிங் மருத்துவக் கல்லூரியில் தற்போது படித்துவருகிறார். ஆனால், உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில், ஒரு ஆண்டு படிப்பை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்.