கடைக்கு சிகரெட் வாங்க வந்த ரஞ்சித் ரத்தோட் அவர்களை முறைத்து பார்த்துக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இரண்டு பெண்களும் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிராவில் சனிக்கிழமையன்று புகைபிடித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை உற்றுப் பார்த்ததாகக் கூறி 28 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாக்பூரில் உள்ள மகாலக்ஷ்மி நகர் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஜெயஸ்ரீ பஞ்சாடே தனது தோழி சவிதா சாயருடன் சேர்ந்து ஒரு பான் கடைக்கு வெளியே நின்று புகைபிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது கடைக்கு சிகரெட் வாங்க வந்த ரஞ்சித் ரத்தோட் அவர்களை முறைத்து பார்த்துக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இரண்டு பெண்களும் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Chennai Traffic Change: பிரதமர் மோடி வருகையால் சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!
ஆத்திரமடைந்த ஜெயஸ்ரீ ரஞ்சித்தைத் தவறாகப் பேசியதுடன், அவரை முகத்தில் புகையை ஊதி வீடியோ எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், வாக்குவாதம் விரைவில் பெரும் சண்டையாக மாறியது.
உடனே ஜெயஶ்ரீ தனது நண்பரான ஆகாஷ் ராவத்துக்கு போன் செய்து அங்கு வரும்படி கூறியுள்ளார். ஆகாஷ் ரவுத் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்ததும், ரஞ்சித்தை பலமுறை கத்தியால் குத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ஜெயஸ்ரீ தனது நண்பர்களை வரவழைத்ததை அடுத்து கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டதாக கடை உரிமையாளரும், வழக்கின் முக்கிய சாட்சியுமான லக்ஷ்மன் தாவ்டே போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஞ்சித்தை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஜெயஸ்ரீ, சவிதா, ஆகாஷ் ஆகியோரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இரண்டு கம்பெனியில் ரகசியமாக வேலை பார்த்து ரூ.1.4 கோடி சம்பாதித்த கில்லாடி ஐ.டி. ஊழியர்!