கவலையே வேண்டாம்! கடற்படையின் புதிய VLF ரேடார் ஸ்டேஷன் திட்டம் ரொம்ப பாதுகாப்பானது!

By SG Balan  |  First Published Apr 8, 2024, 5:46 PM IST

தாமகுண்டம் காப்புக்காடு பகுதியில் உள்ள 2900 ஏக்கர் நிலம் அறிவியல் ஆய்வுக்குப் பின்பே ரேடார் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடற்படை கூறுகிறது.


தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள இந்திய கடற்படையின் இரண்டாவது அதிநவீன மிகக் குறைந்த அதிர்வெண் (VLF) ரேடார் நிலையம் மனிதர்கள் அல்லது அப்பகுதியின் தாவர-விலங்குகள் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்தத் திட்டம் பற்றிய செய்திகள் வெளிவந்ததில் இருந்தே ரேடார் நிலையம் அமைந்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமின்றி, பிற உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கும் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என சில தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

Tap to resize

Latest Videos

இந்தியக் கடற்படை, தமிழ்நாட்டில் இதேபோன்ற நிலையத்தை இயக்கிய அனுபவத்தின் அடிப்படையில் இந்த கருத்துகளை நிராகரிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் இதைப் பற்றி தெளிவாக விளக்கியுள்ளது.

உள்ளூர் மக்களின் அச்சங்களை முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்றும் ஆனால், ரேடார் ஸ்டேஷன் மூலம் எந்தத் தீங்கும் இல்லை என்றும் உறுதி அளித்துள்ளது. மனிதர்கள் அல்லது அப்பகுதியின் தாவர-விலங்குகள் மீது கதிர்வீச்சு தாக்கம் இருக்காது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இரண்டு கம்பெனியில் ரகசியமாக வேலை பார்த்து ரூ.1.4 கோடி சம்பாதித்த கில்லாடி ஐ.டி. ஊழியர்!

தாமகுடம் வனப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பேராசிரியர் கே. புருஷோத்தம் ரெட்டி, இந்திய கடற்படை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், 12 லட்சத்துக்கும் அதிகமான மரங்களைக் கொண்ட வனப்பகுதி பாதிக்கப்படக் கூடாது என்பதையே வலியுறுத்துகிறோம் என்ற தெரிவிக்கிறார்.

தாமகுடம் அனந்தகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது கிருஷ்ணா நதியின் துணை நதியான முசி நதி தோன்றும் இடம். முசி நதியின் வரலாற்று முக்கியத்துவத்தையும் பேராசிரியர் புருஷோத்தம் சுட்டிக்காட்டினார். அது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக ஹைதராபாத் புறநகரில் உள்ள ஒஸ்மான் சாகர் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வழங்குகிறது.

ரேடார் நிலையத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, ஆற்று நீரின் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளார். இதனால் நீண்டகால சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்த கவலைகளை எழுப்புகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் தாமகுண்டம் காப்புக்காடு பகுதியில் உள்ள 2900 ஏக்கர் நிலம் அறிவியல் ஆய்வுக்குப் பின்பே ரேடார் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடற்படை கூறுகிறது.

இந்திய கடற்படை, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு முக்கியமான உலகளாவிய கடற்படை சக்தியாக பரிணமித்துள்ளது, எனவே நீண்ட தூர தகவல்தொடர்பு தேவை இன்றியமையாதது. இந்தத் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விவாதத்திற்குப் பிறகே அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு முதல் இதேபோன்ற ரேடார் நிலையத்தை கடற்படையினர் இயக்கி வருகின்றனர். கடந்த 34 ஆண்டுகளாக அந்த ரேடார் நிலையம் உள்ள பகுதியில் சுமார் 1800 பேர் தங்களுடைய உடல்நலத்திற்கு எந்தத் தீங்கும் இன்றி தங்கியிருப்பது அதன் பாதுகாப்பு இயக்கத் தரத்திற்குச் சான்றாகக் கூறப்படுகிறது.

ஆனந்த் அம்பானி துபாயில் ஷாப்பிங்! ரோல்ஸ் ராய்ஸ் காருடன் வரிசை கட்டி வந்த 20 கார்கள்!

click me!