இளைஞரைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற சகோதர்! ரூ.1.9 கோடி பணத்துக்காக சதித் திட்டம்!

இறந்த ஜெகதீஷின் பெயரில் உள்ள ரூ.1.9 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு கொலையை போதை மருந்துகளைக் கொடுத்து உட்கொள்ள வைத்து பின், சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 


மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் ஒரு இளைஞருக்கு போதை மருந்துகளைக் கொடுத்து பின் சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு முக்கிய குற்றவாளிகளை போலீசார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். இறந்தவரின் பெயரில் இருந்த ரூ.1.9 கோடி இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காக திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்யத் துணிந்துள்ளனர்.

இறந்த இளைஞர் முரார் பகுதியைச் சேர்ந்த கன்ஷியாம் ஜாதவ் என்பவரின் மகன் ஜெகதீஷ் ஜாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குவாலியரில் உள்ள அந்திரியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெகதீஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை ஜெகதீஷின் ஒன்றுவிட்ட சகோதரரும் அவருடைய இரண்டு நண்பர்களும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர் என்று்ம போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

Latest Videos

அக்டோபர் 19ஆம் தேதி காலை, காம்பவுண்ட் சுவர் ஒன்றின் அருகில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து குவாலியர் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சிங் சண்டேல், ஏஎஸ்பி தேஹத் நிரஞ்சன் சர்மா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

விளையாடும்போது பிளாஸ்டிக் வலையில் சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவன்; மும்பையில் துயர சம்பவம்

கொல்லப்பட்டுக் கிடந்த இளைஞரின் பாக்கெட்டில் இருந்து கிடைத்த ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, இறந்தவர் யார் என்பதை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். இறந்தவரின் மொபைல் போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது போலீசார் அழைப்பு விவரங்களிலிருந்து ஜெகதீஷின் அகால மரணத்திற்கு சற்று முன்பு ஒரு எண்ணில் இருந்து ஒன்பது அழைப்புகள் வந்திருப்பதை அறிந்தனர்.

கண்டுபிடிக்கப்பட்ட எண் சத்தர்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடையது என்று தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது அவரது போன் கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆக்ரா கான்ட்டில் வைத்து தொலைந்துபோனதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து நடந்த விசாரணையில், பிரதான சந்தேக குற்றவாளிகளான அமர் ஜாதவ் மற்றும் அரவிந்த் என்ற அசோக் ஜாதவ் ஆகிய இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

கைதான இருவரும் ஜெகதீஷின் பெயரில் உள்ள ரூ.1.9 கோடி மதிப்புள்ள இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு கொலையை திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுவிட்டனர். ஜெகதீஷுக்கு போதை மருந்துகளைக் கொடுத்து உட்கொள்ள வைத்து பின், சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியல் முதலிய பொருட்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தக் கொலையில் உடந்தையாக இருந்த மூன்றாவது கூட்டாளியான பல்ராம் சரல் தலைமறைவாக உள்ளார். அவரைக் கைது செய்ய விசாரணை நடைபெற்று வருகிறது.

துபாயில் 3 நாள் நடக்கும் இந்தியா குளோபல் மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்

click me!