என்னை முதல்வராக்குங்கள்.. இல்லைனா நான் MLAவாக இருக்கிறேன் - காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த டி.கே சிவக்குமார்

By Raghupati R  |  First Published May 17, 2023, 8:42 AM IST

என்னை கர்நாடக முதல்வராக ஆக்குங்கள் அல்லது எம்எல்ஏவாக நீடிப்பேன் என்று டி.கே சிவக்குமார் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கூறியுள்ளார்.


கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்கும் போட்டியில் உள்ள காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி,  டி.கே சிவக்குமார் அடுத்த முதல்வர் ஆக வேண்டும் என்ற தனது விருப்பத்தை கார்கேவிடம் வெளிப்படுத்தினார்.

2019 இல் அவர்களின் அரசாங்கம் சரிந்த பிறகு மாநிலத்தில் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப உதவியதாகக் கூறினார். மே 10 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க சிவக்குமார் மற்றும் சித்தராமையா இருவரும் காங்கிரஸ் தலைமையைச் சந்திக்க புதுடெல்லியில் இறங்கினர்.

Tap to resize

Latest Videos

undefined

கார்கே உடனான தனது சந்திப்பில்,  டி.கே சிவக்குமார் காங்கிரஸ் தலைவரிடம், சித்தராமையாவுக்கு ஏற்கனவே முதல்வராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறியதாக சொல்லப்படுகிறது. தனக்கு முதல்வர் நாற்காலி மறுக்கப்பட்டால், காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக மட்டுமே பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார்.

சித்தராமையா முதலமைச்சராக இருந்த காலம் தவறான ஆட்சி என்றும், கர்நாடகாவில் உள்ள முக்கிய சமூகமான லிங்காயத்துகள் முன்னாள் முதல்வருக்கு எதிராக இருப்பதாகவும்  டி.கே சிவக்குமார் கார்கேவிடம் கூறினார். ரகசிய வாக்கெடுப்பு முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் விவாதித்த பிறகு கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் முடிவு செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சோனியா காந்தி தற்போது சிம்லாவில் இருக்கிறார். கடந்த திங்களன்று, கர்நாடகாவிற்கான மூன்று பார்வையாளர்களும் தங்கள் அறிக்கையை கார்கேவிடம் சமர்ப்பித்தனர். அப்போது கட்சித் தலைவர்களின் கூட்டம் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ் 135 இடங்களிலும், ஆளும் பாஜக 66 இடங்களிலும் வெற்றி பெற்றது. கிங் மேக்கராக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஜேடி(எஸ்) கட்சி, மாநிலத்தில் 19 இடங்களைக் கைப்பற்றியது. இந்த நிலையில் அடுத்த கர்நாடக முதல்வர் யார் என்பதை கூடிய விரைவில் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..இனி உங்க காதலியின் Chat பாதுகாப்பா இருக்கும்.. யாராலும் படிக்க முடியாது.! WhatsApp அசத்தல் அப்டேட்

இதையும் படிங்க..டெல்லி விரையும் டி.கே.சிவக்குமார்.. தலைமைக்கு தூதுவிட்ட சித்தராமையா - அடுத்த கர்நாடக முதல்வர் யார்?

click me!