மகாராஷ்டிரா அரசு தப்பியது! ராஜினாமா செய்ததால் மீண்டும் ஆட்சி அமைப்பும் வாய்ப்பை இழந்தார் உத்தவ் தாக்கரே!

Published : May 11, 2023, 12:32 PM ISTUpdated : May 11, 2023, 01:55 PM IST
மகாராஷ்டிரா அரசு தப்பியது! ராஜினாமா செய்ததால் மீண்டும் ஆட்சி அமைப்பும் வாய்ப்பை இழந்தார் உத்தவ் தாக்கரே!

சுருக்கம்

மகாராஷ்டிரா அரசில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகரின் அதிகாரம் குறித்து மற்றொரு பெரிய அமர்வில் விசாரிக்க பரிந்துரைப்பதாவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு ஆட்சியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் நடைபெற்று வந்தது. உத்தவ் தாக்கரே அணிக்காக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜரானார்கள். ஹரிஷ் சால்வே, நீரஜ் கவுல் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜராகி வாதிட்டனர். கடந்த மார்ச் 16ஆம் தேதியுடன் முடிவுற்று, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கலகம் செய்தத ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு ஆதரவாக செயல்பட்ட அப்போதைய மகாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. உத்தவ் தாக்கரே பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவை இழந்துவிட்டதாகக் கருதி தவறு செய்துவிட்டார் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜூன் 22ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து

மேலும், உத்தவ் தாக்கரே நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ததால், ஏக்நாத் ஷிண்டே அரசு பதவியேற்றது குறித்து உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது. இத்துடன் சபாநாயகரின் அதிகாரம் குறித்து மற்றொரு பெரிய அமர்வில் விசாரிக்க பரிந்துரைப்பதாவும் கூறியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர் மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.  அவரது அரசும் கலைக்கப்பட்டிருக்கும். ஆனால், தகுதி நீக்கம் குறித்த விசாரணை புதிய அமர்வுக்கு மாற்றபட்டுள்ளதால் அவரது பதவியும் அரசு தப்பியுள்ளது.

சபாநாயகர் ஏக்நாத் ஷிண்டேவின் குழுவுக்கு கொறடாவை நியமித்தது சட்டப்படி தவறு என்று குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஒரு கட்சியாக இல்லாத குழுவுக்கு கொறடாவை நியமிக்க முடியாது என்றும் அரசியல் கட்சிக்குத்தான் கொறடாவை நியமிக்கும் அதிகாரம் உள்ளது எனவும் விளக்கியுள்ளது.

மாநிலங்களுக்கே அதிகாரம் உண்டு: டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நபம் ரெபியா வழக்கில் 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை எடுத்துக்காட்டிய உச்ச நீதிமன்றம், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் அதிகாரம் குறித்து பெரிய அமர்வு விசாரணை நடத்தும் என்று கூறி இருக்கிறது. உள்கட்சிப் பூசல்களைத் தீர்க்க நம்பிக்கையில்லா தீர்மானத்தை பயன்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றி கருத்து கூறியுள்ள உத்தவ் தாக்கரே ஆதரவாளரான சஞ்சய் ராவத், "தற்போதைய மகாராஷ்டிர அரசு சட்டவிரோதமானது என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு காட்டுகிறது. இது எங்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி" என்று கூறியுள்ளார்.

நபம் ரெபியா வழக்கு என்றால் என்ன? அதற்கும் மகாராஷ்டிராவுக்கும் என்ன தொடர்பு?

Karnataka Election: கர்நாடக தேர்தலில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த புதுமண தம்பதிகள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!