மதுபிரியர்களுக்கு சூப்பர் செய்தி !! இனி சூப்பர் மார்க்கெட்டில்.. மது வாங்கலாம்.. அரசின் அதிரடி அறிவிப்பு

Published : Jan 28, 2022, 02:17 PM IST
மதுபிரியர்களுக்கு சூப்பர் செய்தி !! இனி சூப்பர் மார்க்கெட்டில்.. மது வாங்கலாம்.. அரசின் அதிரடி அறிவிப்பு

சுருக்கம்

சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது அரசு. 

மதுப்பிரியர்களுக்கு முக்கியமான தகவலை வெளியிட்டு இருக்கிறது மகாராஷ்டிரா அரசு. மதுபான கடைகளில் மட்டுமே ஒயின் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. 

அதன்படி 100 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள கடைகளில் மதுபானங்களின் விற்பனை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், பழச்சாறு மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிர அரசின் இந்த முடிவிற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!