Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்:அமைச்சர் மாண்டவியா பேச்சைக் கண்டித்து திமுக வெளிநடப்பு

Published : Feb 10, 2023, 01:34 PM ISTUpdated : Feb 10, 2023, 01:44 PM IST
Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்:அமைச்சர் மாண்டவியா  பேச்சைக் கண்டித்து திமுக வெளிநடப்பு

சுருக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக இன்று மக்களவையில் எழுந்த வாதத்தின்போது திமுக எம்.பிக்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக இன்று மக்களவையில் எழுந்த வாதத்தின்போது திமுக எம்.பிக்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை கட்டிடம் கட்டும் பணிகள் ஏதும் நடக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கடந்த ஆண்டு விளக்கம் அளித்த மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1977 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், பணிகள் 2021 முதல் 2026ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. 

SSLV-D2 ராக்கெட் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது:3 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் எம்பிபிஎஸ் படிப்பு தற்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாக இயக்குநர், நிர்வாக துணை இயக்குநர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மக்களவை இன்று தொடங்கியதும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில் “ நாட்டில் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த மோடி அ ரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக வெளிநாடு செல்லத் தேவையில்லை.

2014ம் ஆண்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் நாட்டில் இருந்தநிலையில், தற்போது 657 ஆக அதிகரித்துள்ளது. மாநில அரசுகள், தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கும்போது, பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கடந்த 2022ல் 37 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்தோம், 89 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன” எனத் தெரிவித்தார்

அப்போது திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள், எழுந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி என்னாயிற்று, அதன் நிலை என்ன, ஏன் இன்னும் மதுரை எய்ம்ஸ் கல்லூரி  செயல்படவில்லை என்று கேள்வி எழுப்பினர். 
இதற்கு மத்திய அமைச்சர் மாண்டவியா கடும் கோபத்துடன் “ மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில்  படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி கட்டுவதற்காக ரூ.1900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

அதற்கு திமுக எம்.பி.க்கள் மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி கட்டப்படவில்லை, தயாராகவில்லை என்று சத்தமிட்டனர். 

ஆட்சியைக் கலைத்த கட்சியுடன் கூட்டணியா? திமுகவை விளாசிய பிரதமர் மோடி

இதனால் கோபமடைந்த மாண்டவியா “தவறான தகவலை அவையில் திமுக எம்.பி.க்கள் கூறுகிறார்கள், மக்களை திசை திருப்பும் செயல். சிலர் அனைத்திலும் அரசியல் செய்ய முயல்கிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பதுஎனக்குத் தெரியும், மருத்துவக் கல்லூரியில் ஊழியர்கள், பணியாளர்கள் , கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்ததற்கு கடும் நடவடிக்கை நான் எடுத்திருக்கிறேன். இதுதான் என்னுடைய பதில். 
இதுபோன்ற முறைகேடுகளை மோடி அரசுஅனுமதிக்காது, மோசமான மருத்துவக் கல்லூரிகள் மீது நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்

மத்திய அமைச்சர் மாண்டவியா பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். மாண்டவியாவுக்கு ஆதரவாக, பாஜக எம்.பி.க்களும் எழுந்து கோஷமிட்டனர்.
திமுக எம்.பி. தயாநிதிமாறன் பேசுகையில் “ யார் இவர், இப்படிப் பேசுகிறார், எங்களை மிரட்டுகிறார், அச்சுறுத்துகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டன்ர. அவர்களை அவைத் தலைவர் ஓம் பிர்லா அமைதிகாக்கும்படி கே்டடுக்கொண்டார். 

மத்திய அமைச்சர் பேசிய வார்த்தைகள் சரியானதா அல்லது தவறானதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று மக்களவைத் தலைவர் தெரிவி்த்தார் இதையடுத்து, திமுக எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு  செய்தனர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!