PM Narendra Modi Mumbai visit: பிரதமர் மோடி இன்று மும்பை வருகை! 2 வந்தே பாரத் ரயில்கள், கல்வி வளாகம் தொடக்கம்

Published : Feb 10, 2023, 11:19 AM IST
PM Narendra Modi Mumbai visit: பிரதமர் மோடி இன்று மும்பை வருகை! 2 வந்தே பாரத் ரயில்கள், கல்வி வளாகம் தொடக்கம்

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு இன்று வரும் பிரதமர் மோடி, 2 வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாவுத் போரா சமூகத்தினருக்கான கல்வி வளாகம், மேம்பாலம்உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்க உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு இன்று வரும் பிரதமர் மோடி, 2 வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாவுத் போரா சமூகத்தினருக்கான கல்வி வளாகம், மேம்பாலம்உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்க உள்ளார்.

மும்பைக்கு வரும் பிரதமர் மோடி முதலில், சத்திரபதி சிவாஜி ரயில்நிலையத்திலிருந்து-சோலாப்பூர் வரையிலான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைக்கிறார், அதன்பின் மும்பையில் இருந்து அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சாய்நகர் ஷீரடி கோயிலுக்கு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைக்கிறார்.

ஆட்சியைக் கலைத்த கட்சியுடன் கூட்டணியா? திமுகவை விளாசிய பிரதமர் மோடி

மும்பை-சோலாப்பூர் வழித்தடம் 455 கி.மீ தொலைவாகும். இந்த தொலைவை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 6.30 மணிநேரத்தில் கடக்கிறது. ஏறக்குறைய ஒருமணிநேரத்தை வந்தேபாரத் ரயிலால் சேமிக்க முடியும். இது தவிர சோலாப்பூரில் உள்ள சித்தேஸ்வர், அகால்கோட், துல்ஜாபூர், பந்தர்பூர், புனேமாவட்டம் அலன்டி ஆகிய நகரங்களையும் இந்த ரயில் இணைக்கிறது.

மும்பை-ஷாய்நகர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 343 கி.மீ தொலைவை 5மணிநேரம் 25 நிமிடங்களில் கடக்கிறது. நாஷிக், திகம்பரேஸ்வர், ஷனி சிங்னாபூர் கோயிலையும்இணைக்கிறது. இதன் மூலம் மும்பையிலிருந்து புறப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3 ஆக அதிகரித்துள்ளது. 

ஹிண்டன்ப்ர்க் நிறுவன அறிக்கை மீது விசாரணை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

மும்பை சத்திரபதி ரயில்நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.தாவுத் போரா சமூகத்தின் சார்பில் நடத்தப்படும், அந்தேரியில் உள்ள அல்ஜிமியா துஸ் சைபியா கல்வி வளாகத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 

இது தவிர வகோலா முதல் குர்லா வரை மற்றும் சான்டாகுருஸ் மற்றும் செம்பூர் இணைப்பு சாலை மேம்பாலத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த இணைப்பு மேம்பாலம் மற்றும் சாலை கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் சலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

இந்த பாலம் நடைமுறைக்கு வந்தால், மும்பை போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். அதிலும் மாலட் மற்றும் குரார் இடையிலான பாதைஅதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. இந்த பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புண்டு. 

கடந்த ஒரு மாதத்துக்குள் மும்பைக்கு 2வது முறையாக பிரதமர் மோடி வருகிறார். கடந்த மாதம் 19ம் தேதி, ரூ.38ஆயிரம் மதிப்பிலான உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?