ISRO SSLV-D2 launch:SSLV-D2 ராக்கெட் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது:3 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை!

Published : Feb 10, 2023, 09:42 AM ISTUpdated : Feb 10, 2023, 11:47 AM IST
ISRO SSLV-D2 launch:SSLV-D2 ராக்கெட் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது:3 செயற்கைக்கோள்களை  நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை!

சுருக்கம்

எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் 3 செயற்கைக் கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவாண் விண்வெளி ஆய்வுநிலையத்திலிருந்து வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது.

எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் 3 செயற்கைக் கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவாண் விண்வெளி ஆய்வுநிலையத்திலிருந்து வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோ நிறுவனம் எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட்டை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுப்பியபோது அது தோல்வி அடைந்தநிலையில் இப்போது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு நிலையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. 

12 நகரங்களில் QR கோட் முறையில் நாணயங்கள் வழங்கும் எந்திரம்: ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்ரோ அனுப்பிய எஸ்எஸ்எல்வி-டி1 சிறிய ரக ராக்கெட் குறித்த இலக்கை அடையாமல் தோல்வி அடைந்தது. அதில்உள்ள குறைபாடுகளை சரி செய்து, 2வது முறையாக 3 செயற்கைக்கோள்களை இந்த முறை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பி இருக்கிறது. 

இதுவரை மிகப்பெரிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை தயார் செய்து வந்த இஸ்ரோ முதல்முறையாக சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்பும் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளையும் தயாரிக்க முடியும் என்று உலகிற்கு நிரூபித்துள்ளது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட் அதிகபட்சமாக 500 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனுடையது. இஸ்ரோஅனுப்பிய 3 செயற்கைக்கோள்கள் எடைய 350 கிலோதான். சதீஸ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து சீறிப்பாய்ந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் புறப்பட்ட 15 நிமிடங்களில் பூமியின் குறைந்த நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது.

இந்த ராக்கெட்டில் பிராதான செயற்கைக்கோள் இஸ்ரோவின் இஓஎஸ்(EOS-07),  செயற்கைக்கோளாகும். அதாவது புவி கண்காணிப்பு செயற்கைகோளாகும். இது தவிர அமெரிக்காவின் அன்டாரிஸ் நிறுவனத்தின் ஜானுஸ்-1 செயற்கைக்கோள், சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஆசாத்சாட்-2 (AzaadiSAT-2) செயற்கைக்கோளாகும்.

இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் தாது கண்டுபிடிப்பு: 59லட்சம் டன் இருப்பதாக மத்திய அரசு தகவல்

இதில் ஆசாத்சாட் செயற்கைக்கோள் 75 மாணவிகளின் உழைப்பில் உருவானதாகும். உடலின் நலன் குறித்த புள்ளிவிவரங்கள் அடங்கிய தகவல்கல் இதில் அடங்கியுள்ளன.  என்சிசி-அமைப்பின் 75வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வகையில் என்சிசி பாடலையும் இந்த செயற்கைக்கோள் இசைக்கும்

இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில் “ புதிய ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி-டி2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள். முதல்முயற்சி தோல்வி அடைந்தநிலையில் 2வது முயற்சிவெற்றிபெற்று துல்லியமாக செயற்கைக்கோள்களை பூமியின் நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்திவிட்டோம்.3 செயற்கைக்கோள் தயாரிப்பு குழுவுக்கும் வாழ்த்துகள். கடந்த முறை தவறு ஏற்பட்டது, இந்தமுறை அதைச் சரி செய்து வெற்றியாக்கிவிட்டோம்” எனத் தெரிவித்தார்

எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து 15 நிமிடங்கள் பயணத்தில் 450 கி.மீ தொலைவில் புவியின் குறைந்த நீள்வட்டப்பாதையில் 3 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.

இஓஎஸ்-07 செயற்கைக்கோள் 156.30 எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு மற்றும் அலைக்கற்றையில் ஈரப்பதம் குறித்து ஆய்வுசெய்ய செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது

அமெரிக்காவின் ஜானுஸ்-1 செயற்கைக்கோள் 10 கிலோ எடை கொண்டது, சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா செயற்கைக்கோள் ஆசாதிசாட்-2 செயற்கைக்கோள் 8.7 கிலோ எடை கொண்டதாகும். நாடுமுழுவதும் 750 மாணவிகள் உழைப்பால் இந்த செயற்கைக்கோள் உருவானது
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!