Shanelle Irani Marriage: ஸ்மிருதி இரானி மகள் திருமணம்! ராஜஸ்தான் கோட்டையில் கோலாலகலம்!

By SG BalanFirst Published Feb 9, 2023, 7:02 PM IST
Highlights

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷானெல் இரானியின் திருமணம் ராஜஸ்தானில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான கோட்டையில் இன்று நடைபெறுகிறது.

பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானியின் மூத்த மகள் ஷானெல் இரானியின் திருமணம் இன்று ராஜஸ்தானில் நடக்கிறது.

அண்மையில் பாலிவுட் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரின் திருமணம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு பிரம்மாண்ட திருமண விழாவும் ராஜஸ்தானில் களைகட்டி இருக்கிறது.

ஸ்மிருதி இரானியின் மூத்த மகள் ஷானெல் இரானியை வெளிநாட்டில் வசிக்கும் வழக்கறிஞர் அர்ஜுன் பல்லா இன்று கரம்பிடிக்கிறார். இவர்களுக்கு 2021ஆம் ஆண்டிலேயே நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. திருமண வைபவம் பிப்ரவரி 8ஆம் தேதியே தொடங்கிவிட்டது. முக்கிய வைபவமான திருமண விழா இன்று நடைபெறுகிறது.

மிக ஆடம்பரமாக நடக்கும் ஷானெல் இரானியின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பழம்பெருமை மிக்க கிந்வார் கோட்டையில் நடைபெறுகிறது.

கிளிகளுக்கு திருமணம்! பாரம்பரிய முறையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்!

ஷானெல் இரானி

ஷானெல் இரானி மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட மையத்தில் சட்டமேற்படிப்பை முடித்தவர்.

ஷானெல் இரானியை மணக்கும் அர்ஜுன் பல்லா இந்திய வம்சாவளியைக் கொண்டவர். இவரது தாத்தாவும் பாட்டியும் இந்தியர்கள். குடும்பத்துடன் கனடாவில் வசிக்கிறார். இவரது பெற்றோர் சுனில் பல்லா மற்றும் ஷபினா பல்லா. இவருக்கு ஒரு தம்பியும் இருக்கிறார்.

அர்ஜுன் கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள செயின்ட் ராபர்ட் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். மேலும் லண்டன், லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். ஆப்பிள் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றியவர். எம்பிஏ பட்டமும் பெற்ற இவர் தற்போது வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார்.

Nehru Gandhi family: நேரு பெயரை வைத்துக் கொள்வதில் வெட்கம் ஏன்?: பிரதமர் மோடி கேள்வி

கிம்சார் கோட்டை

திருமண விழாவில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக மொத்தம் 50 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். திருமணம் நடைபெறும் கோட்டையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மணல் திட்டுகளால் சூழப்பட்ட கிம்சார் கோட்டை, 500 ஆண்டுகள் பழமையானது. பாஜக தலைவர் கஜேந்திர சிங்கிற்குச் சொந்தமானது. இந்த பிரம்மாண்ட கோட்டையில் 71 அறைகள் உள்ளன.

ஸ்மிருதி இரானிக்கு ஷானெல், ஜோயிஷ் என இரண்டு மகள்களும் ஜோர் என்ற மகனும் உள்ளனர். ஷானெல், ஸ்மிருதி இரானியின் கணவர் ஜூபின் இரானியின் முதல் மனைவியான மோனா இரானிக்குப் பிறந்தவர்.

PM Modi on DMK: ஆட்சியைக் கலைத்த கட்சியுடன் கூட்டணியா? திமுகவை விளாசிய பிரதமர் மோடி

click me!