independence day: டெல்லி செங்கோட்டை அணிவகுப்பில், முதல்முறையாக ‘மேட் இன் இந்தியா’ துப்பாக்கி மூலம் மரியாதை

By Pothy RajFirst Published Aug 15, 2022, 10:08 AM IST
Highlights

டெல்லி செங்கோட்டையில் இன்று நடந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.

டெல்லி செங்கோட்டையில் இன்று நடந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.

முதல்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “ஹவிட்சர்” துப்பாக்கி சுதந்திரதினத்தில் பயன்படுத்தப்பட்டு, அதில் மரியாதை செய்யப்பட்டது இதுதான் முதல்முறையாகும். 

தாய்நாட்டின் சேவைக்காக இணைந்திருப்போம்: ராகுல் காந்தி சுதந்திரதின வாழ்த்து

இதற்கு முன் நடந்த சுதந்திரதின விழாக்களில் ஆங்கிலேயர் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மூலம்தான் வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது. முதல்முறையாக M-17 ரகஹெலிகாப்டர்களும் பூக்களை செங்கோட்டையில் தூவி மரியாதை செலுத்தின.

பிரதமர் மோடி தனது சுதந்திரதின உரையில் குறிப்பிடுகையில் “ இந்த சத்தத்தைத்தான் நாம் எப்போதும் கேட்க விரும்பினோம். 75 ஆண்டுகளுக்குப்பின் இந்த சத்தத்தை கேட்கிறோம். 75 ஆண்டுகளுக்குப்பின், டெல்லி செங்கோட்டையில் முதல்முறையாக சுதந்திரதினத்தில் இந்தியாவிலேயே முற்றிலுமாக தயாரி்க்கப்பட்டதுப்பாக்கிகள் மூலம் மரியாதை செலுத்தப்பட்டது. 

உலக ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா.. பிரதமர் மோடி..!

இந்தியாவில் தயாரி்க்கப்பட்ட துப்பாகிகள் மூலம் சுடப்படும் சத்தம் கேட்டு அனைத்து இந்தியர்களும் உற்சாகமும், உத்வேகமும் அடைவார்கள். நாட்டின் பாதுகாப்புத்துறை நமது நோக்கமான ஆத்மநிர்பார் திட்டத்தை செயல்படுத்தி முன்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள். என் நெஞ்சில் இருந்து நமது ராணுவ வீரர்களுக்கு வணத்தை தெரிவிக்க விரும்புகிறேன். 

ஆத்மநிர்பர் பாரத் பற்றிய எனது கண்ணோட்டத்தை ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கூட்டாக ஏற்றுக்கொண்ட விதம், அவர்களுக்கு நான் சல்யூட் அடிப்பது போதுமானதாக இருக்காது. 

Independence Day 2022: பிரதமர் மோடி சுதந்திர தின தலைப்பாகை ஒரு சிறப்புப் பார்வை

இது சாதாரண தீர்மானம் அல்ல. ராணுவத்தில் 300வகை பொருட்களை பட்டியலிட்டு அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல் இந்தியாவிலே தயாரிக்க உறுதி பூண்டார்கள். ஆத்மநிர்பார் எனும் சிறிய விதை மிகப்பெரிய அளவுக்கு மரமாக வளர உதவும்  ” எனத் தெரிவித்தார்


 

click me!