Independence Day 2022: ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் ஆசீர்வாதம் தேவை.. பிரதமர் மோடி..!

By vinoth kumarFirst Published Aug 15, 2022, 10:06 AM IST
Highlights

வரும் 100 வது ஆண்டில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக மாற வேண்டும். 2047க்குள் சுதந்திர வீரர்களின் கனவை நிறைவேற்றுவோம். அடுத்த 25 ஆண்டுகளில் அடிமைத்தனத்தை உடைத்தெறிவோம். வரும் 25 ஆண்டுகளில் நாம் ஒரு நொடியை வீணாக்க முடியாது. ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைந்து நிற்போம். பெண்கள் குறித்த மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும். 

கடைசி குடிமகனுக்கும் அரசின் சலுகைகள் சென்றுசேரும். காந்தியின் கனவை அடைவதே எனது குறிக்கோள் என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில்;-  உலகம் முழுவதும் மூவண்ணகொடி பறக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி தங்களின் உணர்வை தெரிவித்துள்ளனர். இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். விடுதலை போராட்ட வீரர்களின் நினைவை போற்றுவோம். அவர்களின் கனவை நிறைவேற்றும் நேரம் இது. தியாகங்கள் தேசபற்றை வளர்க்கிறது.

இதையும் படிங்க;- Independence Day 2022: பிரதமர் மோடி சுதந்திர தின தலைப்பாகை ஒரு சிறப்புப் பார்வை

வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பலம். பன்முகத்தன்மை, பல மொழிகள் கொண்டது இந்தியா. பல்வேறு சவால்களையும் எதிர் கொண்டு இந்தியா எவ்வித தடையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அனைவருக்கும் மின்சாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனநயாகத்தின் தாய் என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது. 75 ஆண்டுகளாக நாம் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை கண்டு வருகிறோம். மக்களுக்கு அதிகாரம் வழங்கும் பணியை நான் செய்து வருகிறேன். இந்தியா விடுதலை பிறந்த பிரதமர் நான் . கடைசி மனிதனுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளது. நாட்டில் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. நல்ல தீர்வுகளை வழங்கும் இந்தியாவை உலகம் உற்று நோக்கி பார்க்கிறது. பெரும் தொற்றான கொரோனா சிறந்த முறையில் எதிர்கொண்டோம். 200 கோடிக்கும் மேல் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளோம். ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர். நமது நாட்டை கண்டு நாமே கர்வம் கொள்ள வேண்டும்.

வரும் 100 வது ஆண்டில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக மாற வேண்டும். 2047க்குள் சுதந்திர வீரர்களின் கனவை நிறைவேற்றுவோம். அடுத்த 25 ஆண்டுகளில் அடிமைத்தனத்தை உடைத்தெறிவோம். வரும் 25 ஆண்டுகளில் நாம் ஒரு நொடியை வீணாக்க முடியாது. ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைந்து நிற்போம். பெண்கள் குறித்த மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் போது நமது கனவுகள் மேலும் வளரும். பெண்களின் முன்னேற்றம் மிக அவசியமானது. அவர்களுக்கு நாம் உரிய மதிப்பளிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பாலின சமத்துவம் முக்கியம். ஒவ்வொரு கிராமமும் இன்டர்நெட்டால் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் 5 ஜி சேவையை பெறவுள்ளோம். 

ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் சிறையில் இருந்து வந்து தலைமை பொறுப்புகளை ஏற்கின்றனர். குடும்ப நலம் என்பது அரசியலில் மட்டும் இல்லை. நாட்டின் ஒவ்வொரு துறையிலும் உள்ளன. குடும்ப நலம் என்ற மோசமான விஷயத்தால் நாட்டில் பல திறமையானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குடும்ப நலம், குடும்ப அரசியல் என்ற விஷயம்தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது. ஒருபக்கம் வீடே இல்லாத மக்கள் இன்னொரு பக்கம் திருடிய பொருளை எங்கே வைப்பது என தெரியாத மக்கள். ஊழலுக்கு எதிராக பலமான நடவடிக்கை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். மக்களின் ஆசீர்வாதத்ததால் தான் ஊழலுக்கு எதிரான போரில் வெற்றிபெற முடியும். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் ஆசீர்வாதம் தர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- உலக ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா.. பிரதமர் மோடி..!

click me!