நிலவுக்கு 100 கி.மீ. தொலைவில் சந்திரயான்-3... இஸ்ரோவுக்கு இனிதான் பெரிய சவால் காத்திருக்கு!

By SG Balan  |  First Published Aug 8, 2023, 9:51 AM IST

ஆகஸ்ட் 17 தேதிகளுக்குள் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் 100 கிமீ சுற்றுப்பாதைக்கு நகர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 


சந்திரயான்-3 விண்கலம் 100 கிமீ தூர சுற்றுப்பாதையில் இருந்து நிலவுக்கு அருகில் நகரத் தொடங்குவதுதான் மிக முக்கியமான கட்டம் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை சந்திராயன்-3 பற்றி பேட்டி அளித்த சோமநாத், ஒட்டுமொத்தமாக, இதுவரை சந்திரயான்-3 இன் பயணம் நல்ல முறையில் நடந்துவருவதாகக் கூறினார்.

ஆகஸ்ட் 9 முதல் 17 தேதிகளுக்குள் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் 100 கிமீ சுற்றுப்பாதைக்கு நகர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் தற்போது நிலவில் இருந்து 170 கிமீ தொலைவில் 4,313 கிமீ நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த முக்கியமான கட்டத்தில் சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பிற்கு நெருக்கமாக நகர உள்ளது.

துபாயில் தூங்கிக்கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய ராட்டினம்! சுற்றுலா பயணிகள், வணிகர்கள் அதிருப்தி!

விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் மென்மையாகத் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"100 கி.மீ வரை எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. பூமியில் இருந்து லேண்டரின் நிலையை துல்லியமாக மதிப்பிடுவதில் மட்டுமே சிக்கல்கள் உள்ளன. இந்த அளவீடு மிகவும் முக்கியமானது. நாங்கள் அதை சுற்றுப்பாதை நிர்ணய செயல்முறை (orbit determination process) என்று அழைக்கிறோம். இது சரியாக இருந்தால், மீதமுள்ள செயல்முறைகளும் சரியாக நடைபெறும்” என்று சோமநாத் தெரிவித்துள்ளார்.

"இந்த முறை எங்களால் விண்கலத்தை மிகச் சரியாக நகர்த்த முடிகிறது. சுற்றுப்பாதை மாற்றங்கள் திட்டமிட்டபடி நடக்கின்றன. எந்த விலகலும் இல்லை. எனவே, இது சிறந்த முடிவுகளைக் அளித்துவருகிறது. எல்லாம் சரியாக நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் இஸ்ரோ தலைவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இப்படி பார்த்ததே இல்ல... அதிசயித்து போன விஞ்ஞானிகள்! உடைந்த உலோகம் தானாகச் சேர்ந்த அதிசயம் நடந்தது எப்படி?

2019 ஆம் ஆண்டு சந்திரயான்-2 பயணத்தின் ஒரு பகுதி வெற்றி பெற்றது, சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்கும் முயற்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். "சந்திரயான்-2 அனுபவம் பெரும் உதவியாக உள்ளது. அப்போது என்ன தவறு நடந்திருக்கும் என்பதை நாங்கள் விரிவாக ஆராய்ந்தோம். அதே போன்ற சூழலை உருவாக்கி, சந்திரயான்-3 இல் நிறைய மாற்றங்களைச் செய்தோம்" என்கிறார் சோம்நாத்.

சந்திரயான்-2 திட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திரனின் படங்கள் சந்திரயான்-3 தரையிறங்கும் பகுதி அளவீடுகளை  நிர்ணயிக்க பயன்பட்டுள்ளன எனச் சுட்டிக்காட்டும் இஸ்ரோ தலைவர் சோம்நாத், "தற்செயல்கள் நிகழ்வுகள், தோல்விகளைத் தவிர்க்கும் வகையில், அனைத்தையும் சரிபார்க்க விரிவான சோதனைத் திட்டத்தை நாங்கள் மேற்கொண்டோம்" எனவும் கூறுகிறார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், ஞாயிற்றுக்கிழமை, சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் முதல் காட்சிகளை இஸ்ரோ வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.

நிலவைப் படம்பிடித்த சந்திரயான்-3! முதல் காட்சிகளை வெளியிட்டது இஸ்ரோ!

click me!