100 நாள் வெலை தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு.. காங்கிரஸ் வழங்கிய முக்கிய வாக்குறுதிகள்..

By Ramya s  |  First Published Mar 16, 2024, 4:11 PM IST

தொழிலாளர்களுக்கான 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.


2024 மக்களவை தேர்தவில் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி விவசாயிகள், பெண்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. 

அந்த வகையில் தற்போது தொழிலாளர்களுக்கான 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைவருக்கும் சுகாதார வசதிகள் உரிமை திட்டம், 100 நாட்கள் கிராம்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களின் சம்பளம் ரூ.400ஆக உயர்த்தப்படும். நகப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி திட்டம் செயல்படுத்தப்படும்..

Latest Videos

undefined

BREAKING : 2024 மக்களவைத் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.. முழு விபரம் இதோ !!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும். தொழிலாலர் நலனிற்கு எதிரான சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்.  பழங்குடியின மக்களின் காடுகளை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்படும், சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

Congress' guarantee

⭐ Shramik NYAY Guarantee ⭐

Shram ka Samman: The Congress guarantees a national minimum wage of Rs 400 per day, which will also be the minimum for all MGNREGA workers nationally. pic.twitter.com/wxL7Vke3sU

— Congress (@INCIndia)

 

முன்னதாக பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதன்படி, ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்ச ரூபாய், மத்திய அரசு வேலைகளில் 50% இட ஒதுக்கீடு, அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு 2 மடங்கு, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் வேலை செய்யும் பெண்களுக்கு விடுதி உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. 

தேர்தல் 2024.. முதல் தலைமுறை வாக்காளர்கள் எத்தனை பேர் தெரியுமா? - தலைமை தேர்தல் ஆணையர் கொடுத்த பல அப்டேட்ஸ்!

இதே போல் விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி ரத்து, கடன் தள்ளுபடி, ஏற்றுமதி இறக்குமதி கொள்கை, விளை பொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!