Loksabha Elections 2024 : மக்களவை தேர்தல் குறித்த முக்கியமான தகவல்களை தற்பொழுது இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் அறிவிக்க தொடங்கியுள்ளார். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் நாடு முழுவதும் சுமார் 10.5 லட்சம் வாக்கு சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராஜீவ்குமார் தெரிவித்திருக்கிறார். தகுதியானவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ள ராஜீவ் குமார், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 49.7 கோடி ஆண் வாக்காளர்களும், 47.1 கோடி பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளதாக கூறினார்.
அதேபோல ஏப்ரல் 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தால் அவர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார் ராஜீவ் குமார். மூத்த குடிமக்களுக்கு என்று சிறப்பு ஏற்பாடாக அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மக்களவைத் தேர்தலில் மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
undefined
இந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுவதாகவும் அவர் கூறினார். வன்முறையில்லாமல் மிகவும் அமைதியாக தேர்தலை நடத்த தற்பொழுது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறிய அவர் 85 வயது நிரம்பிய சுமார் 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல 82 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ள நிலையில் நாடு முழுவதும் ஒன்று 1.82 கோடி வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளதாக கூறியிருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்காக 55 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை மே மாதம் 5ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.